கம்பை முருகன் பிள்ளைத்தமிழ்
அலங்காரம்
சிற்றிற்பருவம்10 / 12
கம்பை முருகன் பிள்ளைத்தமிழ் · அலங்காரம்
சிற்றிற்பருவம்
71✓
பிறக்கும் வயிரச் சிலையடுப்பும்
பெருஞ்செம் மணித்தீக் கனல்விறகும்
பெட்பி னுயர்பொன் பாத்திரமும்
பெய்யு முலைநற் பனிநீரு
நிறக்கும் வெண்முத் தரிசியுமாய்
நீடுஞ் சிறுசோ றட்டுமற்றை
நீல மணியா தியகறியாய்
நிலவ வமைத்து வல்லிருளைத்
துறக்கும் பவள விளக்கேற்றிச்
சுரிமென் குழலே மணல்வீட்டிற்
சுவாமி நினக்கே படைத்திடுவேஞ்
சுரக்குங் கருணை புரிந்தெமக்கே
சிறக்கும் விருந்தாய் வருஞ்சேயே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
72✓
வேதத் தனிமா வடிமுளைத்த
விமலச் சுடரை வெண்மணலான்
விதியி னமைத்தா கமப்படியே
விரும்பிக் கவுரி பூசைசெயும்
போதத் ததனை யழிப்பதற்குப்
பொங்கி யெழுநின் னகரன்னை
புரிந்து யாஞ்செய் மணல்வீட்டைப்
பொள்ளென் றழிக்கப் போதியென
வோதத் தடையின் மழவிடைபோ
லுற்றாய் கொல்லோ வுளத்தாலு
முனக்கு முன்றாய் தனக்குமந்தோ
வொருபுன் பிழையுஞ் செய்தறியோஞ்
சீதத் தளிர்ச்செஞ் சீறடியாற்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
73✓
உன்றா யுமையிவ் வுலகமெலா
முவந்தோர் சிற்றி லெனவயர
வுந்தை கணத்தி னழிக்குமவ்வா
றொருநீ முறையிற் புகுந்தாயே
னன்றாய்க் குறவர் வளர்த்தகொடி
நாகர் வளர்த்த விளம்பிடியு
நாடி யிழைக்கும் வண்டன்மனை
யோடி யழித்தி நவில்வார்யா
ரின்றா யத்தோ டியாமழைத்த
வெழிலார் மனையை யழிப்பதனுக்
கென்ன முறையோ நினைப்புனைந்திங்
கினிது விடுத்த வன்னையின்பாற்
சென்றாய்ந் தறிதி யருட்குழந்தாய்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
74✓
ஆசு படியு மசுரமின்னா
ரல்லே நினக்கே யகம்படிமைக்
கன்பு படியு மனமுடையை
மமைக்கு மணல்வீ டழிப்பாயேற்
பாசு படியு மிலைக்காவிற்
பமரம் படியு மலர்க்கடம்பின்
பைந்தார் மணக்குந் திருமேனி
படியும் விசும்பு மாசுபட
மாசு படியு மைப்படியும்
வாட்க ணீலி யுன்னுடைய
மாதா வறிந்தா லெப்படியோ
மற்றப் படியாம் படிப்பதென்னே
தேசு படியுஞ் சிவப்படியாற்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
75✓
ஒருத்தி மணநா யகனாக
வொருத்தி மணப்பெ ணாகவமைத்
துள்ள பலரு மவரவருக்
குவந்த படியே முறையியற்றி
யருத்தி யுடன்யாம் வண்டன்மண
மயர விழைக்குஞ் சிறுவீட்டை
யழித்த லழகா வுல்கேழு
மளித்தா ளளித்த வழகாநீ
யிருத்தி மணநா யகனாக
யாங்க ணினக்கே மணமுடிப்பே
மெல்லாச் சிறப்புஞ் செய்கின்றே
மெயின மடவாட் குரைக்ககிலேந்
திருத்தி மனையை யலங்க ரிப்பேஞ்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
76✓
அற்ப முடையே மணல்வீட்டி
னமைக்கும் பவள விளக்கவித்தே
யகல்கின் றாயை யென்புரிவோ
மனந்த மறைக்கு மெட்டரியாய்
பற்ப றிசையுங் காணுகின்றாய்
பாட லாடல் புரிகின்றாய்
பண்ணாக் குறும்பும் பண்ணுகின்றாய்
பார்வை யுள்ளு நுழைகின்றாய்
கற்ப தருவே மலர்மருவே
கனியே கனியி னறுஞ்சுவையே
கண்ணீ ராறா வுடையையெமைக்
கண்ணீ ராறாச் செயனன்றோ
சிற்ப குமர குருசரணஞ்
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
✓
சுரவா ரணிமுன் மணந்திருப்பத்
தூய வமுதங் கிடைத்திருப்பத்
தொழுவோர் பலருஞ் சூழ்ந்திருப்பச்
சொல்லா தகன்று தினைப்புனத்திற்
குரவா ரணிமைக் குழற்குறத்தி
கொடுத்த தினைமா வுண்டுமதன்
கோபந் தணித்தி யென்றுகரங்
கூப்பி மருவி யொருவிமற்றோ
ரிரவா ரணியந் தனினடந்தவ்
வெயின மானைத் திருடினையென்
றிகழ்ந்த துளதோ வன்றியுமென்
னிழைத்தோம் பிழைத்தோ மெனினழித்தி
77✓
திரவா ரணிதன் சிறுகுமரா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 77
78✓
காராா் மலக்கா டறுத்தவர்தங்
காரண மொருப்பட் டினிதமரக்
கலின்செய் பனிரு கரக்கன்றே
கனன்றெஞ் சிற்றி லழித்தியெனிற்
போரார் சூரு ரழித்ததுவும்
பொன்னா டமரர்க் களித்ததுவும்
பொய்யாய் முடியு மையநீ
புலவர் பெருமா னறியாயோ
நீரார் பெருக்கா னிதநிதமு
நீண்மீன் வான்மீ னொடுமோதி
நிழல்செய் மதியைத் தன்னிடத்தே
நிறுத்த முயலும் விதமுகளுஞ்
சீரா ரயிரா வதிநாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 78
79✓
தறைசூழ் கலையின் வளைசிந்தா
சமனம் புரிந்து வளர்விந்தா
சலத்தை யடக்கி யுயர்சந்தா
சலத்தி னமர்ந்த முனிக்கிந்தா
வுறைதி யெனத்தா னகந்தந்தா
யுனது பெருமைக் கினிதுவந்தா
முஞற்று மெமது மனையுந்தா
வுதைக்கத் தகுமோ வுரையெந்தாய்
மறையோன் றொழுஞ்சங் கரன்மைந்தா
மலைமா னளித்த வுயர்சிந்தா
மணியே நெடுமான் மகிழ்செந்தா
மரையான் மருகா வானந்தா
சிறைதீ ரமரர் புகழ்சுந்தா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 79
80✓
வில்வச் சடையோன் வெள்ளிமலை
விளங்கு மதன்பாற் கந்தமலை
மேரு மலைமந் தரமலையவ்
விமய மலைவேங் கடமலைசெங்
கல்வத் தணிகை மலைவேடர்
களிப்பி னமரும் வள்ளிமலை
கனஞ்சேர் மயிலை மலைமுதலாக்
கணக்கின் மலையுஞ் செழுநகரு
நல்வைப் பிடங்க டொறுநாளு
நயந்து நனிவீற் றிருந்தருணீ
நங்கள் சிறுவீ டழிப்பதென்னே
நவிலும் படைவீ டாறுவந்துஞ்
செல்வக் குமர கோட்டமமர்
சேயே சிற்றில் சிதையேலே
திருவார் கம்பா புரிவேளே
சிறியேஞ் சிற்றில் சிதையேலே. 80