முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
அம்புலிப்பருவம்9 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

அம்புலிப்பருவம்

68சாமம்✓
ஒழுகமுத மாயாது கற்பகத் தவர்மகிழ
வுதவலான் மிகுமாட்சிசே
ருயர்வான கத்தனாய் வாணிவந் தடிதாழ
வொளிர்கலா நிதியாகலாற்
றொழுகரத் தாரைநாற் பான்மருவ வைத்துச்
சுருக்கம் பெருக்கநல்கித்
துதிநாப்ப ணிசைமேவி வாழ்தலா லச்சந்
தொலைந்தோட நியமத்தினோர்
முழுகியெழு மலைவாய் விளங்குசர வணனாக
மூவுலகு மெச்சவரலான்
முழுதுமொத் துறையுமொரு பொருளென் றுனைக்கூவி
முளரிக் கரத்தழைக்கு
மழகனெம் முட்பழகு குழகன்முரு கேசனுட
னம்புலீ யாடவாவே
யமரர்கூட் டத்தர்பணி குமரகோட் டத்தனுட
னம்புலீ யாடவாவே.
69✓
பெருமயின்மே லேறியிருளறக் கதிர்விடும்
பெருவேலை யினிதுகந்தாய்
பேதமற நின்னுடன் மருவியங்குறமான்
பிறர்க்குவகை நல்கநின்றாய்
நிருமலச் சோதியாய்க் குவலய மலர்த்தியணி
நீபந் துலங்கவருவாய்
நீள்கருணை பொன்றாது மாதரைப் புலவர்க்கு
நிலவின்ப மிக்கீகுவா
யுருமலிந் தொளிர்சங்க முத்தமிழ வாக்கடலி
னுண்மூழ்கி யங்குதிப்பா
யுன்செய்கை தன்செய்கை யொக்குமென் றெங்குரிசி
லுன்னொடா டலைவிழைந்தா
னருமைமலி சித்துவிளை யாடுமுரு கேசனுட
னம்புலீ யாடவாவே
யமரர்கூட் டத்தர்பணி குமரகோட் டத்தனுட
னம்புலீ யாடவாவே.
70✓
நிலைமுற்ற வானாறு தலைமருவி முன்னாலு
நீள்கரந் தோன்றவருவாய்
நீதிக்கு மாறாது கீழ்மே னடக்கவொரு
நியமந் தனைப்படைத்தாய்
கலையுற்ற பட்சமா தத்தைநல் வாகுறக்
காட்டிப் புகழ்ச்சிபெற்றாய்
கல்லார மாலைமிக் ககலத் தடத்திற்
கமழ்ந்தலர மேவிநிற்பாய்
மிலையுற்ற கற்பகத் தாரளக வெண்ணாந
மீன்மாதர் நசையுளாவெவ்
வேளையுந் தற்குவமை சிறிதுமதி யாதசெவ்
வேளுனை மதித்தழைத்தா
னலையுற்ற சேவகம் விடுத்தெங்கண் முருகனுட
னம்புலீ யாடவாவே
யமரர்கூட் டத்தர்பணி குமரகோட் டத்தனுட
னம்புலீ யாடவாவே.
71பேதம்✓
தேய்ந்துவளர் வெண்கலைக ளீரெட்டு மாதவற்
சேர்ந்துறுவை நீயிவன்றான்
றேயாது வளர்கலைக ளெட்டெட்டு மாதவத்
தெய்வமுனி வர்க்கருளுவான்
காய்ந்திடப் பெற்றவ மதிப்புண்டு வீரனாற்
கறுவுபகை பெற்றாயிவன்
கருதுவெம் பகைவரைக் காய்ந்துநவ வீரருங்
கழல்பணியு மேன்மையுற்றான்
பாய்ந்துனைப் பாம்புண்டு மிழ்ந்திடு மிவன்மயிற்
பரியதனை யுண்டுமகிழும்
பற்றிய களங்கநீ யகளங்க னிவனடியர்
பாலுமது பற்றாதுகா
ணாய்ந்திடின் மிகப்பெரிய னெமதண்ண லாதலா
லம்புலீ யாடவாவே
யமரர்கூட் டத்தர்பணி குமரகோட் டத்தனுட
னம்புலீ யாடவாவே.
72✓
பூரணையி னின்முழு வுருக்கொண் டொளிர்ந்துபின்
பொன்றுபிறை யாகுவாய்நீ
பொன்றாத பிறைநுதலு மதிமுகமு மோராறு
பொலிவுறப் பெற்றானிவ
னாரணன் சேய்படைத் திடவருங் கடவுணீ
நானிலத் துன்போற்பல
நகுகதிர்த் தொகுதியைத் தனதுதிரு முகமொன்றி
னல்கும்பர் கோமானிவன்
சீரணவு மண்டமொன் றிற்புறத் திருளைச்
சிதைப்பைநீ புவனமுழுதுஞ்
சீவரக மலவிரு ளகற்றிப் புறத்துமொளிர்
தேசோ மயத்தனிவனாம்
ஆரணத் தலைவனினை வெகுளாமுன் வருகைநன்
றம்புலீ யாடவாவே
யமரர்கூட் டத்தர்பணி குமரகோட் டத்தனுட
னம்புலீ யாடவாவே.
73✓
ஒப்புண்மை நின்றளக் கஃதின்மை யிவனுக்கி
வுலகோத லுணராய்கொலோ
வூனவிழி காணவரு வாயிவன் ஞானவிழி
யுணரவரு சீலமுடையா
னிப்புவித் தேருருளை மத்தேறு தறியா
யிழுப்புண்டு கட்டுண்பைநீ
யெஞ்ஞான்று மிவ்வெளிமை யெய்திடா திவனோ
லிம்பரும் பருமாற்றுவார்
செப்புவெண் மணியா னெனத்தோன்று வாயிவன்
றேவசுப் பிரமணியனாந்
திகழுமெந் தம்பிரான் றன்பெருமை யறியாத
செல்வக் குழந்தையன்பா
லப்பிரச் செங்கையி னழைக்கவும் பெறுதியோ
வம்புலீ யாடவாவே
யமரர்கூட் டத்தர்பணி குமரகோட் டத்தனுட
னம்புலீ யாடவாவே.
74தானம் — வேறு✓
தரிக்கு முடலின் முயற்களங்கைத்
தண்ணார் கருணை மலர்நோக்கஞ்
சார்த்தி யொழிப்பன் மார்க்கண்டன்
றனைப்போற் கலைகள் பதினாறும்
பரிக்கும் பேற்றி னுவாமதியாம்
பரிசீய்ந் தென்றும் விளங்கவைப்பன்
படப்பாம் பகரர் பகைமயிலாற்
பரவு மயிலான் மாற்றுவிப்பன்
விரிக்கும் புகழ்வெண் ணிலவெங்கோன்
வெகுளா முனஞ்சென் றடைதியிவண்
வெகுண்டான் முக்க ணரன்சிரிக்கும்
விழிக்கும் புகல்வே றுனக்கெங்கோ
வரிக்கு மருகன் முருகனுட
னாட வருவா யம்புலியே
யணிசேர் குமர கோட்டனுட
னாட வருவா யம்புலியே.
75✓
திருக்கோ கனக மலர்க்கைவிரற்
செய்ய பவளந் தனிற்சுட்டிச்
செல்வக் குழந்தை யெம்பெருமான்
சேணோக் கியநின் முகநோக்கத்
தருக்கோ டிருத்தி நின்சிறுமைத்
தன்மை யிதிலோர் வியப்பின்றாற்
றருவும் புயலு மிருநிதியுந்
தாழுங் கொடையா னிவன்செல்வப்
பெருக்கோ ரணுவு முணர்ந்திலைநின்
பேதை மதிதீர்ந் தெய்தினருட்
பேறு பெறலா மிதனின்மிகு
பேறொன் றுளதோ பசுமயின்மே
லருக்கோ தயம்போன் முருகனுட
னாட வருவா யம்புலியே
யணிசேர் குமர கோட்டனுட
னாட வருவா யம்புலியே.
76தண்டம்✓
எம்மான் மகிழ்கூ ரறக்கருணைக்
கிலக்கா கிலைநீ மறக்கருணை
யியற்றப் பெறுதி போலுமந்தோ
விகற்போ ராற்றன் முடிவில்லான்
கைம்மா மலர்வேன் மழுக்குலிசங்
கணைகார் முகமங் குசங்கதையுங்
காணா யிவன்கண் சேப்புறிவிற்
காக்கத் தேவர் மூவர்களும்
தம்மா லொல்லா தொதுங்குவர்நின்
றரமென் னாம்பி னென்படுவை
நன்னேர் பொன்மே ருவைப்புடைத்த
சதிரோற் பகைத்து முய்திகொலோ
வம்மான் மடந்தை கேள்வனுட
னாட வருவா யம்புலியே
யணிசேர் குமர கோட்டனுட
னாட வருவா யம்புலியே.
77வேறு தனனா தனன தாத்தத் தனனா தான தானந் தனதான✓
தகரீ டிறுகு கோட்டிற் குழைவாய்
தான நாகந் தனதோர்கை
தனிலே கவள மாக்கப் பெறுவாய்
சாரு மாலொன் பதுவீர
ரிகல்வா ரெனின்கெய் வாழ்க்கைக் குயிரே
தேறு மோர்பைஞ் சிகிகேவ
லிவைபாய் தரிலு னாட்டிற் கிடரா
மேவி னாலென் புரிவாய்சொன்
மிகுசூர் மடிய வீட்டிப் புகழ்சேர்
வீர னாரென் றொருகேள்வி
வினவாய் கமல வீட்டிற் றிகழ்சேர்
வேத னார்தந் தலையோதும்
அகழ்சூழ் குமர கோட்டக் குகனோ
டாட வாவம் புலிவாவே
யடையார் பணியும் வேற்கைப் பரனோ
டாட வாவம் புலிவாவே.