முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
செங்கீரைப்பருவம்4 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

செங்கீரைப்பருவம்

18✓
பொங்கார்வ மொடுகுடிலை யத்தமொழி கெனவினவு
போதமிகு தாதையர்க்குப்
போதித்த வருண்ஞான மணநாறு செய்யவாய்ப்
புண்டரிக மலர்களாறுந்
தங்காத னவரசப் பைந்தமிழ்த் தேறலைத்
தாமுகுத் திடுதலேய்ப்பத்
தண்மழலை சிந்தப் பெருங்கருணை வெள்ளந்
ததும்புபன் னிருநாட்டமு
மிங்கா தரம்புரிந் தெமைநோக்க மதிவதன
மிருமூன்று மசையநிலமே
லிலகுகைம் மலர்பதித் தொருதாண் மடித்தொன்றை
யெழில்கொள நிமிர்த்தியுன்றிச்
செங்கா ரெனக்குலவு சிங்கார வேலனே
செங்கீரை யாடியருளே
தீட்டும் புகழ்க்குமர கோட்டந் தனக்கிறைய
செங்கீரை யாடியருளே.
19✓
கைம்மலரி னம்பர்முக் கண்மலர் புதைத்தவக்
காலையுல கங்களெங்குங்
கங்குற் படாம்போர்ப்ப வதுகண்டு பிழைதபக்
கடிநகர்க் காஞ்சிமேவி
நம்மைவழி பட்டினிய மாதவ முஞற்றுகென
நாடியவ் வாறியற்றி
நளிரலைக் கம்பா நதிப்புனற் பிரவாக
நண்ணவிடை யூறுதீர்ப்பான்
கொம்மைமுலை மார்பத் தழுந்தவே கம்பறைக்
குருகுலவு தோட்களாரக்
குறுகித் தழீஇக்கொண்டு வேட்டவ ரிடப்பாதி
கொண்டற னெலாம்வளர்த்த
செம்மையுறு காமக்க ணம்மைதரு செம்மலே
செங்கீரை யாடியருளே
தீட்டும் புகழ்க்குமர கோட்டந் தனக்கிறைவ
செங்கீரை யாடியருளே.
20✓
குரவணியல் வெட்சிசு தாளமொடு புனையுயக்
குன்றா றிரண்டின்மேவிக்
கோகனக வதனமல ராரணிரு பானேயர்
கூடிவிளை யாடுபரிசிற்
கரவணலி லாதொளிர் துவாதசா சித்தர்செங்
கரமாயிரம் பரப்பிக்
காணுற விமைத்தாங் கிமைத்தபொற் குண்டலங்
கவினுறப் பூண்டசைதர
வரவணைப் பள்ளியம் பசுமுதவு மரிவைய
ரருட்கவுரி வாணிதிருமி
னவிர்கார்த் திகைத்தாயர் சசியனையர் பிறரும்வாழ்த்
தமுதாசி யுட்கொள்வள்ளைச்
சிரவணமி ராறொன்று சரவண பவானந்த
செங்கீரை யாடியருளே
தீட்டும் புகழ்க்குமர கோட்டந் தனக்கிறைவ
செங்கீரை யாடியருளே.
21✓
அங்கண்மா ஞாலத்தி னந்தகா ரம்பாற
வலர்கதிர்கள் பலவிரித்தும்
ஆர்வலர்கண் முறையிட் டிரப்பவவர் வேட்டவர
மாவன வெலாமளித்துந்
துங்கமா மந்திரம் வழாவகையி னந்தணர்
தொடங்குமக வினையோம்பியுஞ்
சுருதியி னிராசியப் பொருளினை விளங்குறத்
தோமற வினக்கல்செய்தும்
பங்கமே யெய்தவெதிர் தெவ்வரைத் தேய்த்திடும்
பாசறைக் களம்விழைந்தும்
பண்ணனைய தீஞ்சொற் குறப்பாவை யோடுரை
பகர்ந்துமகிழ் மூவிரண்டாந்
திங்களா னனமருவு மங்களா கரமுருக
செங்கீரை யாடியருளே
தீட்டும் புகழ்க்குமர கோட்டந் தனக்கிறைவ
செங்கீரை யாடியருளே.
22✓
தங்கப் பெருஞ்சிலை தனைக்குழைத் திலகுகோ
தண்டஞ்செய் தேந்துதிண்டோ
டழுவிக் குழைத்திரு முலைச்சுவடு மங்கைத்
தலத்தணி வளைச்சுவடுமே
பங்கப் படாதம ருடற்றமும் பாக்குமொரு
பார்ப்பதி மடந்தைபோலும்
பைங்கொண்ட லன்னகரு விண்டுவும் பிரமனும்
பகருருத் திரமூர்த்தியு
மெங்கட் கிரங்கியரு ளெனவேத்தி வழிபா
டியற்றவிழை பேறுநல்கி
யினியதே மாவடி முளைத்தமுக் கட்கரும்
பெனவே விளங்குசீர்சா
லங்கச்சி யேகம்ப ரின்பச் சிறாரிளவ
லாடியருள் செங்கீரையே
யமரர்வேட் டுப்பணிசெய் குமரகோட் டக்குரிசி
லாடியருள் செங்கீரையே.
23✓
கானவர் மடந்தையுந் தெய்வதப் பிடியுங்
கலந்துவிளை யாடிமகிழ்கூர்
காமவல் லியினிரு மருங்கணைய வவர்நடுக்
கற்பகம் போலமிளிருந்
தேனவிரு நீபச் செழுந்தொடைய லணிபனிரு
திண்டோ ளிளஞ்சிங்கமே
செவ்வே ளெனத்தொண்ட வெவ்வேளை யும்பரவு
தேனுவே சிவபாநுவே
தானவர் புரஞ்சுட்ட வேகம்ப வாணரைத்
தாங்குமோர் விடையுமவர்கோ
தண்டந் தனிற்பூட்டு வாளியும் பரிவொடு
தழீஇப்புணரும் வேய்த்தோளியு
மானநெடு மான்மருக ஞானவடி வேன்முருக
வாடியருள் செங்கீரையே
யமரர்வேட் டுப்பணிசெய் குமரகோட்டக்குரிசி
லாடியருள் செங்கீரையே.
வேறு✓
எண்டரு நான்மறை நாலே ழாகம்
மெதிரெதிர் கொண்டாட
விவைபகர் செம்பொரு டேர்தரு மந்தண
ரிதயம கிழ்ந்தாடப்
பண்டரு சொன்மக ளுமைதிரு வாசிகள்
பலவு மொழிந்தாடப்
பங்கய நிகரறு வதனமு மாடப்
பணிநகை நிலவாடத்
தண்டரு நறவினை யுண்டிமிர் வண்டொடு
தார்புனை புயமாடத்
தாண்டவ ரிற்புனை கிண்கிணி யாடத்
தடமார் பணியாட
வண்டரு நம்பிய தொண்டரு முய்ந்திட
வாடுக செங்கீரை
யன்புறு கச்சிவ ளம்பதி யிற்குக
னாடுக செங்கீரை.
25✓
சமயமொ ராறும் விளங்கிடு மாறொளிர்
சண்முக மதியாடத்
தண்மதி யமுதிற் கண்மலர் பொழியுந்
தண்ணரு ளொளியாட
விமலவ ருலகந் தாங்கலி னீரா
றெழுநிகர் புயமாட
விருமட வாரணை மார்பத் தணிகல
னின்னொலி செய்தாட
விமலத் தீக்கைசெய் முறையிற் புவிமகண்
மீது மகிழ்ந்தொளிரு
மென்கம லக்கை மடித்துயர் தாண்மலர்
மெல்ல வசைந்தாட
வமையுமி தென்றுமை யமைமொழி யாடிட
வாடுக செங்கீரை
யன்புறு கச்சியி லின்புறு நற்குக
னாடுக செங்கீரை.
26தாத்தந் தனனத் தாத்தந் தனதனதந் தாதந்தானா✓
சாற்றுந் தமிழிற் போற்றுந் துதிபுனை
தண்டார் கொண்டேதோள்
சாத்தும் பரிவைக் காட்டும் புலவரி
தஞ்சார் நண்பாலே
மாற்றெங் கவலைக் கூட்டந் தமையென
வந்தார் முந்தாவே
மார்க்கண் டருயக் கூற்றந் தனையடு
மன்றா டுந்தாளா
ராற்றுந் தருமத் தேற்றம் பெறுமுமை
யைம்பா ணன்றாய்மா
லாக்கம் பெறுதற் கூக்குஞ் சூரரிவ
ணன்பா னின்றார்பார்
தேற்றும் படிமுற் றேற்றுங் குருபர
செங்கோ செங்கீரை
சீர்க்குங் குமரக் கோட்டந் திகழ்குக
செங்கோ செங்கீரை.
27தனனா தனனத் தாத்தத் தந்தா தந்தா தந்தானா✓
அசையா மிடியைத் தாக்காற் கஞ்சே
லஞ்சே லென்போனே
யமரா வதியைக் காத்தற் கென்றே
யம்பார் வந்தோனே
யிசையே டணையற் றோர்க்குப் பொன்றா
வின்பு றுந்தேனே
யினிதே யணிதற் காத்தித் தண்டா
ரெண்டோ ளன்சேயே
வசைதீர் தமிழிற் போற்றற் கென்பால்
வந்தா ளுங்கோவே
வழிபா டுறுநற் கூட்டத் தின்பான்
மங்கா வன்பாளா
திசையோர் பகர்மெய்ச் சீர்த்திக் கந்தா
செங்கோ செங்கீரை
திருவாழ் குமரக் கோட்டத் தெந்தாய்
செங்கோ செங்கீரை.