கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
சப்பாணிப்பருவம்6 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
சப்பாணிப்பருவம்
38✓
வாளைப் பிடித்தகர மறவரில் வளர்ந்தபசு
மரகதக் கிள்ளைவள்ளி
மயன்மீறி யைம்பாற் குழற்கற்றை நெய்பூசி
வாரி யணிபெறமுடித்து
நாளக் குறிஞ்சிச் செழுந்தொடையல் பலசூட்டி
நற்றலைப் பணிகள்பூட்டி
நறுநுதலில் வச்சிரப் பொட்டிட் டெழிற்குவளை
நாட்டத்து மைதீட்டிமென்
றோளிற் றகும்பொத்த கொங்கையிற் றொய்யிலைத்
தூரியத் தாற்பொறித்துத்
தொல்லுருக் கவினாடி யிற்காட்டி யெனதுகைத்
தொண்டுகொண் டெனையாளெனத்
தாளைப் பணிந்துபணி யாளுமா மணவாள
சப்பாணி கொட்டியருளே
தமரவாய்ப் புட்கொடிகொள் குமரகோட் டகடவுள்
சப்பாணி கொட்டியருளே.
39✓
மின்னிலகு முகிலூர்தி வச்சிரத் தாற்பண்டு
வெற்புக் குழாங்களஞ்ச
வீறுமிரு சிறகரு மரிந்தான முகில்வண்ண
விண்டுவுஞ் சிலையொன்றனைப்
பன்னிரைக ளோம்பும் பொருட்டகழ்ந் தோராத
பத்திரஞ் செய்தேந்தினன்
பகருமிம் மாதுலர் பராக்கிரம நடைதழுவு
பரிசுடையன் மருமானென
மன்னிகல்செ யவுணரைச் செற்றனையர் முப்புரமு
மண்டழற் கிரைசெய்தநாள்
மாதங்க னார்ந்தந்தை வன்சாப மாக்கியணி
வலயப் புயத்திட்டதோர்
தன்னிகரு மேருவைச் செண்டா லடித்தவன்
சப்பாணி கொட்டியருளே
தமரவாய்ப் புட்கொடிகொள் குமரகோட் டகடவுள்
சப்பாணி கொட்டியருளே.
40✓
ஒப்போத வரியதிரு வெள்ளியங் கிரிமீ
துமாதேவி யொடுவீற்றிருந்
தொளிருமுக் கட்பரஞ் சோதியெம தாதிதிரு
வோலக்க மதுகாண்பதற்
குப்போது நெறியிலப் பூதரத் துனாதருட்
கோயிலை யடைந்துவிண்ணோர்
குழுமிக்க வழிபாடி யற்றிவிடை பெற்றுநடை
கொண்டனர்க ளாகவுந்தா
னப்போது சேய்மைநின் றுறுமாப்பின் வந்தியா
தகல்பிரமன் மீள்கைநோக்கி
யருகழைத் துக்குடிலை யுட்பொருள் விளக்குகென
வறியாமை யான்மயங்கித்
தப்போத வாணியற் குட்டிய கரச்செட்டி
சப்பாணி கொட்டியருளே
தமரவாய்ப் புட்கொடிகொள் குமரகோட் டகடவுள்
சப்பாணி கொட்டியருளே.
41✓
திங்கணிகர் நினதுதிரு முகமண் டலத்திலங்கு
செங்கண்மலர் பொழியுமின்பத்
திருவருட் கடலமுத் மாந்துதல் விழைந்தெமைச்
சிந்தித் திறைஞ்சகில்லார்க்
கெங்கணப யத்தொடு வரம்பெற லியைந்திடா
வெனல்போல் விரித்துமன்பா
லேத்திவழி படுதொண்ட ருக்கியையு மவையென
விசைத்திடுதல் போன்முகிழ்த்தும்
வங்கண மிகுந்துசுதர்ச் சுதமிரு கூறாக
வாரிதி வறப்பதாக
வஞ்சமு ணிரம்புகிர வுஞ்சகிரி நீறாக
வண்கதிர்க் கற்றைகாலுந்
தங்கவைஞ் ஞாங்கரெறி பங்கயச் செங்கையாற்
சப்பாணி கொட்டியருளே.
தமரவாய்ப் புட்கொடிகொள் குமரகோட்டக் கடவுள்
சப்பாணி கொட்டியருளே. 41
42வேறு✓
மூலமல மொன்றுமிரு மாயைகரு மத்தினொடு
மூன்றுமுடை யவராகவாழ்
மூவகைய வாருயிர்த் திரளுக்கு நகுவிந்து
மோகினி விரிந்தமானின்
சீலமுறு மைந்தொழில்செய் நின்றன் சுதந்தரச்
சீர்மையரு ளாற்றன்முழுதுஞ்
செப்பரி தெனச்சிறிது தேர்ந்தளவு தீந்தமிழ்ச்
செய்யுளை யிசைத்தேத்துவோர்
ஞாலமிசை நின்பே ரருட்பே றெலாமெய்தி
நனிவாழ மங்கலமெலா
நண்ணுபிர சாதமென் றினிய திரு வெண்ணீறு
நல்குனது செங்கைமலராற்
கோலமயின் மேலினன் போலவிர்செ வேவினன்
கொட்டியருள் சப்பாணியே
கோத்தநிறை நீர்க்குமர கோட்டமது வேட்டகுக
கொட்டியருள் சப்பாணியே. 42
43✓
தாட்டா மரைக்கன்பி லேமா நினாதுயர்
சடக்கர நினைந்திலேமா
தமிழினின் னிசைபாடி வாழ்த்திலே மாறினது
சந்நிதி பணிந்திலேமா
நாட்டாறு படைவீடு நட்டாறு வென்றுமுய
னற்றவரு ளொன்றிலேமா
நனாவொடு கனாவிலு மறந்திலே மெமைவெகுள
னாளுநின் றொண்டரேம்யாம்
வேட்டாரை மகிழ்விக்கு நின்றனருள் விளையாட்டின்
வேறாய தொன்றுநயவேம்
வீறுமுத் தமிழ்விரகர் கைத்தாள மிட்டது
விளக்கல்போல் வெண்கிம்புரிக்
கோட்டானை யோட்டிவரு நீட்டான தோட்டியாய்
கொட்டியருள் சப்பாணியே
கோத்தநிறை நீர்க்குமர கோட்டமது வேட்டகுக
கொட்டியருள் சப்பாணியே. 43
44வேறு✓
வாழிய விண்ணி லெடுத்தகை யுக்க
மலர்ந்தகை யூருமிசை
வைத்தகை யங்குச மருவுகை கேடக
மன்னுகை வேலொளிர்கை
கேழியன் மார்பிற் றாரில் விளங்குகை
கிளரொலி மணிசேர்கை
கேடற மாமக மோம்புகை மழைபொழி
கீர்த்திக் கையமரர்
யாழியன் மெல்லிசை மகளிரை வேட்டகை
யிவையோ ரீராறு
மெதிரெதிர் தாக்குபு செக்கரை வீச
வெழுந்தொளிர் செம்புயல்போல்
கோழி விலோதன காழியுண் மாதவ
கொட்டுக சப்பாணி
குமரன் கோட்டத் தமருஞ் சேவக
கொட்டுக சப்பாணி. 44
45✓
தார்மார் புறைதிரு மங்கை மணாளன்
சதுமுக னிந்திரனுஞ்
சயசய வென்றிட் வூனமில் வானவர்
தங்கிளை கொண்டாடப்
பார்மா னிடர்மா தவரந் தணர்பலர்
பல்லாண் டுகள்பாடப்
பக்கத் துணைநவ வீரரு னாண்மை
பகர்ந்து மகிழ்ந்தாடச்
சீர்மாண் டதெனத் தானவர் மானமில்
சேனை சிதைந்தோடச்
செங்கள மலகை விருந்து பொருந்தச்
சீரலை வாய்மேவிக்
கூர்மா ணியிலிற் சூர்மா வட்டவ
கொட்டுக சப்பாணி
கொற்றவ குமரக் கோட்டத் துற்றவ
கொட்டுக சப்பாணி. 45
46வேறு
தனன தாத்தத் தனனா தனனா தத்தா தத்தான✓
மறைவி லாப்பத் தெனுமா திரநீள் வைப்பா ரைப்பேணு
மறுவி லாற்றற் பரனீ யெனும்வாய் மைச்சீ ரைத்தேற
மிறையி லாக்கைத் தலமோ துவுபோன் மிக்கோர் தக்கோர்கொள்
விதிவ ழாச்சொற் சதுமா மறைமேல் வித்தா ரப்பீடு
செறியொர் வார்த்தைப் பொருளா னதுபோ திப்பா
ரொத்தேமெய்
தெரிய வார்த்துற் றிடல்போ னனீநே சித்தா டிக்குடு
குறவர் வேட்கைச் சிறுமா னுறவா கொட்டாய் சப்பாணி
குமர கோட்டக் குழகா வழகா கொட்டாய் சப்பாணி. 46
47தனனத் தாத்தத் தனதன தானன தத்தா தத்தான✓
பமரப் பாட்டுக் குழலிரு பாவையர் பற்றான் மிக்கேவு
பணியுற் றாட்பட் டவர்நடு வேயுறை பத்தா பொய்ப்பாச
மமரைப் போக்கித் துதிசெயு மாறெனை வைத்தாப் வித்தார
மதுரப் பாட்டுப் புலவர்கள் மாநிதி வைப்பா மெய்தேவ
தமர்நற் கூட்டத் தடியவர் சேர்தரு தைப்பூ சச்சாறு
தனின்மெய்க் காட்சிக் கினிய னெனாவரு சத்தே சித்தாடு
குமரக் கோட்டத் தமரர் சிகாமணி கொட்டாய் சப்பாணி
குளிர்வெட் பாட்சிக் கொளிர்குக நாயக கொட்டாய் சப்பாணி. 47