முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
காப்பு1 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

காப்பு

1விகடசக்கர விநாயகர் துதி✓
பொன்மாது காவியங் கண்ணோக்க நிறைதலாற்
புருடோத் தமன்விரிஞ்சன்
புருகூத னிருநிதிக் கிழவனா தியர்பெரும்
போகம் புசித்துமிமயக்
கன்மாது மாதவஞ் செய்தரனை வரைதலாற்
கருதுசிவ போகமுற்றுங்
கவலாத சீவர்பிற மண்ணாடு விண்ணாடு
கண்ணாது மெண்ணாதுமே
சொன்மாது புகழஞான பண்டித ரெனக்குலவு
தொன்மைசால் கச்சிநகருட்
சூழ்குமர கோட்டத்து வாழ்பனிரு நாட்டத்தர்
தோட்கணி நறுந்தமிழ்சொலத்
தன்மாது வல்லவையி னொடுவிகட சக்கரத்
தந்திவந் தெமதுசெந்நாத்
தவிசினிது வீற்றிருந் தருளுமென வதனுகள்
சரணம் பழிச்சுதுமரோ.
2இருகோட்டு விநாயகர் துதி✓
புத்தமுத மன்னாட் புணர்வா னினைந்தளவி
லத்தருணங் கானி லடைந்தினிளையோற்-குத்துணைநே
ரெந்தை யிருகோட் டிபமா முகத்தவனென்
சிந்தை யிருளகற்றுந்தே.
3எல்லாம்வல்ல சித்தகுரு துதி✓
கோலமதிட் கச்சிக் குமரகோட் டத்துவளர்
வேலவர்பிள்ளைக்கவியான் விள்ளவே-ஞாலமதிற்
சிந்தித்த வெல்லாஞ் செயவல்ல சித்தனெங்கோன்
கந்தித்த தாட்கமலங் காப்பு.
4குமரகோட்டக் கடவுடுதி✓
சீர்சான்ற கச்சித் திருக்குமர கோட்டத்துட்
பேர்சான்ற வாறுமுகப் பெம்மானே-யேர்சான்ற
பிள்ளைக் கவிநின்மேற் பேசவருள் வாக்களித்தென்
னுள்ளத் தொளிர்க வுவந்து.
5சரசுவதி துதி✓
குளிர்நீர்சூழ் கச்சிக் குமரகோட் டத்தே
யொளிர்நீர் முருகோ னுவப்பத்-தளராமே
பிள்ளைக் கவிபாடும் பெற்றிமிகு வாக்களிப்பாய்
வெள்ளைக் கலைபுனையும் மே.