முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
சிறுபறைப்பருவம்11 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

சிறுபறைப்பருவம்

88✓
கும்பசம் பவமேவு குறுமுனி யகத்தியற்
கும்பரவு பாணினிக்குங்
குலவுசெங் கைத்தலத் தமருக முழக்கியொலி
கூருமக் கரம்விளக்கி
நம்பனரு டென்கலையும் வடகலையு மறுபத்து
நாற்கலையு முற்றுமுணரு
ஞானபண் டிதனும்வெண் கமலா தனச்செல்வி
நான்முகக் குரிசிலாதி
யும்பருட னிம்பரும் பேரன்பி னடிதாழ
வொளிர்கலா நிதியுமானோ
னுவமையறு நீயென்ப தகிலாண்ட கோடிக
ளுணர்ந்திட வுணர்த்தலேய்ப்பச்
செம்பவள வாய்மலரு மாமறை முழக்கெனச்
சிறுபறை முழக்கியருளே
செல்வநிறை குமரகோட் டத்துவளர் திருமருக
சிறுபறை முழக்கியருளே.
89✓
ஞானியென் றொருபெயர் தரித்தெமது கொடியாகி
நாடோறு மொய்ம்பினிற்கு
நாதவடி வானசெஞ் சூட்டுவெண் சேவலஞ்
ஞானநித் திரையுண்மூழ்கு
மானிடரை யாமந் தொறுங்கூவி யெம்பெயர்கொள்
வான்வரவு ணர்த்தியன்னோர்
வைகறைக் கடனாற்ற நிறுவுசெயன் முன்னிகழ
மற்றதன் பின்னலறவிண்
மேனியிரு மாயிரங் கைப்பரிதி வரன்மான
வெம்மலக் கங்குலறனும்
விழிகாண வருளொளி பரப்பியாம் வருதுமுணர்
மின்னெனப் பக்குவர்க்குத்
தேனிமிர் மலர்க்கரத் தறிவிக்கு நெறியினொரு
சிறுபறை முழக்கியருளே
சேனாப தீசர்மகிழ் ஞானோப தேசகுரு
சிறுபறை முழக்கியருளே.
90✓
ஆயிரங் கட்காமன் மேனா ளெமைப்பகைத்
தமராடி முடியிழந்தா
னனையற்கு நிழலீயு மைந்தரு வளித்தனை
யலாதுதிரு வாலவாயை
நீயிரங் காவன்மை யுடனழித் திடுமாறு
நேர்ந்தெமது நெடுவேலினாற்
சீர்வரப் புண்டுரு வழிந்தனை பழம்பகையை
நெஞ்சில்வைத் திரவுபகலாய்
வாயிரங் காநின்று மெம்பறை முழக்கினொடு
மாறுகொள வல்லையானாய்
வாயடக் குவலெனக் கடலொலி யடங்கிட
மலர்க்கையி னொறுத்த லேய்ப்பச்
சேயிரங் கிடவிரங் கருளன்னை யன்னவா
சிறுபறை முழக்கியருளே
திகழ்குமர கோட்டத்துண் மகிழ்முருக நாயகா
சிறுபறை முழக்கியருளே.
91✓
புயலினங் குன்றுதொறு நின்றுவெங் கோடையைப்
பொருதலி னிடித்துமின்னிப்
பொழியும்மழை வெள்ளநீர்ச் சிறைசெய்யு மாக்களுட்
புளகமொடு தாமுழக்கும்
வியனுறு குறிஞ்சியின் றொண்டகப் பறையொலி
வினாயேனை நானிலத்தின்
மிகுபறை முழக்கந் தொடர்ந்திடுதல் போனினது
விளையாட்டி னோருறுப்பாய்
நயமிகும் பறைமுழக் கொலிமுந்த மற்றெந்த
நாட்டுநின் பருவச்சிறார்
நனிமகிழ்வி னாற்கொட்டு பறைமுழக் கந்தொடர
நற்றிணையி லங்குறைகுவோர்
செயலினின் முதன்மைநிலை நாட்டலிற் காட்டலிற்
சிறுபறை முழக்கியருளே
சேந்தனென் றொளிர்குமர கோட்டத்துள் வளர்வேந்த
சிறுபறை முழக்கியருளே.
92✓
மந்திரம் பதம்வன்ன மொடுதத்து வம்புவன
மன்னுகலை யாறத்துவா
மருவுகுண் டலியாதி யிருமூன்று சத்திகளை
மலர்வதன மூவிரண்டா
விந்திரனை யயனைநெடு மாலைமுக் கட்சிவனை
யேரம் பனைக்கரத்தி
லேந்துபல் கருவியாற் காட்டியிக் கடவுள
ரெலாமுநின் விபூதி யென்னத்
தந்திரம் புகலிறைமை வாய்ந்தது குணந்தோய்ந்த
சகளமாய் நிட்களமுமாய்த்
தன்னிகர் கடந்தசம ரசஞான வீடுதவு
தன்மையை யுணர்த்த லேய்ப்பச்
செந்தியம் பதிமுதல வாறுபடை வீடுளாய்
சிறுபறை முழக்கியருளே
திமிரமல மிரியவொளிர் குமரகோட் டக்குரவ
சிறுபறை முழக்கியருளே.
93வேறு✓
பாவா னின்புகழ் பற்பல நாவலர்
பாடி முழக்கிடவும்
பைந்தார் நீபத் தளிகுல மவரெதிர்
பண்கண் முழக்கிடவுங்
கோவா பூமரர்க டுந்துமி யெழு ார்
கோளின் முழக்கிடவுங்
குலவறு மீனா ருமையர மகளிர்கள்
குரவை முழக்கிடவு
மோவா தனையர்க் கின்பருள் செயுமா
றொருபன் னிருகைமுகி
லுயர்குண பூதர மருவிக் கொடைமுர
சொன்று முழக்குதல்போன்
மூவா முருகன் குமரக் கோட்டன்
முழக்குக சிறுபறையே
மொய்குழன் மான்மகண் மோக விசாகன்
முழக்குக சிறுபறையே.
94✓
எம்மத முற்றவ ருந்துதி புரிசீ
ரிலகிய பலதளிசே
ரெழிலார் காட்சி பயக்குங் கச்சியி
லெய்தித் தவமாற்றிச்
செம்மையி னறமெண் ணான்கும் வளர்த்த
சிறப்பொடு பிலமேவுந்
தேவா சனமிசை மூவா வரசு
செலுத்துபு வீற்றுறையு
மம்மையு மாமகள் காமக் கோட்டமு
மரனார் மாநிழலி
லமர்திரு வேகம் பமுமிரு பாலுற
வமைநடு வொளிர்கோயின்
மும்முர சும்மதிர் குமரக் கோட்டன்
முழக்குக சிறுபறையே
மொய்குழன் மான்மகண் மோக விசாகன்
முழக்குக சிறுபறையே.
95✓
தொழுதகை யந்தண ராகம மீரிரு
சுருதி முழக்கமெனத்
துதிபுரி மன்னவர் கொற்றப் பேரிகை
தோயு முழக்கமென
வெழுதகை நாய்கர் மணம்புணர் மாமுர
சின்ப முழக்கமென
வேருடை வேளாண் மரபினர் மழைபொழி
யெழிலி முழக்கமெனப்
பழுதுறு வந்தியர் வண்கொடை முரசிற்
பரவு முழக்கமெனப்
பரதியர் முழவ முழக்க மெனப்பலர்
பலவகை யுரையாட
முழுதுணர் புலவன் குமரக் கோட்டன்
முழக்குக சிறுபறையே
மொய்குழன் மான்மகண் மோக விசாகன்
முழக்குக சிறுபறையே.
96தனன தாத்தத் தனதன தனதன தத்தன தனனதனா✓
இரவை நீக்கித் திருவழு தினையெம
தெய்ப்பற வருண்மதியே
யிதய நாட்டிற் குடிபுகு மிருளற
விச்சையி னொளிர்கதிரே
பரவி யேத்தத் தமிழ்மறை யருள்கிரு
பைக்கட லெனுமதலாய்
பரம வீட்டிற் புகவடி யரைவிடு
பட்சமு ணெகிழ்விடாய்
கரவின் வேட்டுக் குறமக ளொடுபுணர்
கட்டினை மையினொருவா
கவலை மாற்றப் புவிமிசை வளர்தரு
கற்பக மனையகுகா
குரவர் வாழ்த்தத் திகழொரு குருபர
கொட்டுக சிறுபறையே
குமர கோட்டச் சிவசர வணபவ
கொட்டுக சிறுபறையே.
97தத்தன தத்தன தத்தல தத்தன தத்தன தனனதனா✓
கைப்புய லிற்புவி யுற்றவர் கட்கொரு
கற்பக மெனமிளிர்வாய்
கற்றவர் நற்றவர் சொற்றணி பற்பல
கைப்பறு துதிவிழைவா
யொப்புயர் வற்ற மகத்துவ முற்றொளி
ருத்தம குணநிதியே
யொற்றை மருப்புடை யத்திமு கத்தவ
னுக்குடன் வருதுணையே
துப்பும லைக்கிணை பெற்றவு டற்பர
சுக்கர தலன்மதலாய்
துட்டர்க ளைக்களை வெற்றிய யிற்படை
தொட்டெயு முரனுடையாய்
குப்புக ழக்கலி யிற்றிகழ் மெய்ப்பொருள்
கொட்டுக சிறுபறையே
கொற்றவ மிக்குயர் கச்சிய ருட்குக
கொட்டுக சிறுபறையே.