முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
காப்புப்பருவம்3 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

காப்புப்பருவம்

7திருமால்✓
புயன்மருவு கடலாடை யுடலாட வொளிர்நெடும்
பூமங்கை மாமங்களப்
பொலிவெய்த வடையார்கண் மெலிவெய்த வடியவர்
புகழ்ந்துள மகிழ்ந்துவாழ
வியன்மருவு குருபரம் பரைதிகழ வுயர்வெள்ளி
வேதண்ட நின்றுகாஞ்சி
மேவிநற் குமரகோட் டத்துறைசெவ் வேளையெவ்
வேளையு முவந்துகாக்க
கயன்மருவு கட்கடைப் பார்வையான் மயன்மருவு
கைக்குரிய மோகஞ்செயுங்
கமலையை மணந்துதிரு மாலாகி மன்னுயிர்
களுக்கூட்டு மிருபோகமு
நயன்மருவு மாயையிற் றருதலான் மாயனென
நண்ணித் திருப்பாற்கட
னாப்பணொரு பாப்பணையின் மேற்கண்வள ரார்த்திபுரி
நாரா யணக்கொண்டலே.
8சிவபெருமான் குழிப்பு தனதநாத தத்ததன - தானத் தனத்தனா✓
உருவமாயச் சுத்தநிறை - யருவமாய்த் தக்கவரு
வுருவமாய்த் தற்பரம - தாகிற் தருக்குவா
ருவமைகாட் டற்கரிய - கருணையுற் றுப்பெருகி
யொழுகுசீர்த் திக்கினிய - காமக் கணுற்றதா
யுமைமுனோற் றுத்தமுவ - வளையுவாக் கச்சுமுலை
யுறுதலாற் பட்டசுவ - டாகத் திருக்கவே
யொழிவிலாக் கொக்குநிழன் - மணலினாற் பெற்றகுறி
யுடையராய்ச் சிட்டர்தொழ - வாழ்மெய்க் கருத்தனார்
இருவர்பார்த் தற்கரிய - வொருவராய்ப் பத்திசெயிய்
னெளியராய்க் கட்படுமொர் - சேவைச் சிறப்பினா
ரிலையெனாப் பெற்றியுட - னுயிர்கள்வேட் கைப்பொருளை
யினிதினாட் டக்குறைவில் - போகப் பெருக்கினா
ரிடரைமாற் றிப்பிறவி - தவிருமோக் கத்தையுற
வினியமார்க் கத்தையருள் - யோகத் தவத்தினா
ரிருளையோட் டச்சுடர்கள் - விழிகளாக் கித்திகழு
மிறைவர்கூற் றைக்கறுவு - தாளைப் பழிச்சுவா
மருவுவார்க் குச்சுமுக - னெனநிலாய்ச் சித்திதரு
மதமறாக் கைக்களிறு - நேசித்தணைக்குமோர்
மழலைவாய்ச் சொற்பகரு - மிளவலாய்ச் சித்தருறை
மலைகண்மேற் புக்குவிளை - யாடிக் களித்துலா
வருமகமார்க் குட்டலைமை - மருவுதோற் றத்தரசை
மறைகளேத் தற்குரிய - சேயைக் குறத்தியாம்
வனிதைதோட் கிச்சைகொடு - வெருவுகாட் டிற்றிரியும்
வனசமாட் சிப்பதமு - ளானைப்புவிக் குளே
குரவர்வாழ்ந் தப்பெரிய - குரவனாய்த் தெட்பமருள்
குசலவாக் கத்தவனை - வேதத் திருக்குநீள்
குடிலைவீட் டிற்பரவு - முதலையாப் புத்தமிழ்செய்
குநரைவேட் டுத்துதிகொள் - வானைச் சமர்க்கணே
கொடியவாட் பற்றலர்வெள் - கரியினேற் றைப்பொருவு
குகனைநீர்க் கச்சிநடு - வூரிற் றழைப்பதோர்
குமரகோட்டத்துதய - விரவிபோற் சுற்றுகுதிர்
குலவுவேற் கைக்குமர - வேளைப் புரக்கவே.
9பராசக்தி தத்தத் தனன தாத்தத் தானத் - தாத்தனத் தாத்தனா✓
பொற்புக் கயிலை நீத்துப் பாரிற்
றெற்குத் திசையை நோக்கித் தேடிப்
புக்குக் கணவர் வாய்ச்சொற் பேணிச் சாத்திரத் தேர்ச்சிகூர்
புத்திக் கினிய மூர்த்தத் தேமுக்
கட்சிற் பரனை நாட்டித் தேறற்
புட்பத் தொடையல் சாத்திப் பூசித்தார்த்தியிற் போற்றுநாள்
பொக்கப் புனலி னீத்தத் தாலர்ச்
சித்தற் குறுகண் வாய்க்கத் தாவிப்
பொத்திப் பரம னாக்கைக் கேறக் கோற்கரத் தாற்றனீள்
பொற்றைக் குயம தாற்பொய்க் காமற்
கட்டிச் சுவடு காய்ப்பப் பூணப்
புற்றுப் பணியர் வேட்டுப் பாகத் தேற்றிடச் சீர்த்துளாள்
பற்பத் திருமி னாட்குத் தூய்மைச்
சொற்கத் தமரர் நாப்பட் காவிற்
பட்சத் துறைமி னாட்குப் போகப் பேற்றினைக் கூட்டுவாள்
பத்தித் துறையு ளார்க்குப் பாகிற்
றித்தித் தனையர் தேட்டிற் கூடிப்
பப்புத் துயரி னீட்டப் பாசக் காட்டினைப் பாற்றுவாள்
பத்துத் திசையு மேத்தக் கூவிப்
பிச்சைக் கலையு மாக்கட் கேயுட்
பற்றிற் றரும மார்க்கச் சீரைக் காத்தமெய்க் கீர்த்தியாள்
பற்பற் புவன வாட்சிக் காமுற்
பட்டத் தரசி கூத்துப் பாதப்
பக்கத் திறைவர் வீட்டுக் காமக் கோட்டியைப் போற்றுவா
மற்புக் கடலி லாட்டித் தாயொத்
தெற்குக் கருணை காட்டிக் காலற்
கச்சப் படுதன் மாற்றித் தாளைத் தோத்திரித் தேத்தவே
யற்பக் கலியை யோட்டிச் சோறிட்
டிட்டத் தடிமை யாக்கிக் கோடற்
கத்தத் திலகு முற்றுக் கோல்வைத் தேக்கறத் தோற்றுவா
ரற்றைப் பொழுது பாட்டைப் பாடத்
தெற்றிக் குறளை வீட்டிக் கீறற்
கற்றத் துதவி யாற்றித் தீரப் பூட்கையிற் காத்ததே
யப்புச் சடைவெ ணிற்றுக் கோலத்
தற்குக்கு குடிலை மாற்றத் தோர்தற்
கத்தத் தினையொர் தோட்டுக் காதிற் கேட்டிடச் சாற்றுவோர்
கற்புக் குறமி னாட்டத் தேவச்
சற்றுச் கணமு நீட்டிக் காமற்
கைத்தற் பணிசெய் வேட்கைக் கோனற் கார்த்திகைக் கேற்றசேய்
கத்துக் கடலின் மேட்டிற் சாலக்
கொக்கிற் குலவு தூர்த்தச் சூரைக்
கைக்கட் சுலவு வேற்குக் கூறிட் டூர்க்கிளைப் பாற்றுவார்
கட்டுக் கனிகொள் பாக்குத் தோகைப்
பச்சைச் சிகிர தாத்திப் பூவைக்
கர்ச்சித் தரியி னேற்றிற் சூழ்தற் கூக்குமெய்ப் பாட்டினார்
கற்றுப் புலவர் வாழ்த்துக் கூறப்
பெற்றுத் திகழு நாற்சற் றாரற்
கச்சிக் குமர கோட்டச் சீலத் தீர்த்தனைக் காக்கவே.
10விநாயகர் குழிப்பு தத்தன தத்ததன-தானத் தாத்தனா✓
மிக்கறு குத்தொடை-யைப்புனை பொற்புய
வித்தகர் முக்கணர்-மயலைப் போக்கிமா
மித்தைம னத்தைய-டக்கிய ருட்டுறை
விட்டுந டத்திடு-மொருகைத் தோட்டியார்
வெற்றிகொ ளொற்றைம-ருப்பையொ டித்தொரு
மெய்ச்சரி தத்தினை-மலையிற் றீட்டுவார்
விக்கின னைக்கொடு-துட்டர்க ளைச்சிதை
வித்தடி யர்க்கரு - டலைமைப் பாட்டினா
ரெக்கலை கட்குமு - தற்குடி லைத்தளி
யிற்றிகழ் தற்பரர்-சுமுகக் காட்சிநே
ரிட்டவி சிட்டகு - ணத்திரு சத்திக
ளிற்பிரி வற்றவ - ருணர்விற் சாட்சியா
ரிற்புவி ளைத்தொளி - ரத்திமு கத்தின
ரெட்டிரு நற்பெயர்-மனுவிற் சேர்க்கையா
ரிக்குமு முச்சுவை - முக்கனி சர்க்கரை
யிட்டுயர் குக்கியர் - கழலைப் போற்றுவாஞ்
செக்கர்நி றச்சடி - லத்தும் திப்பிறை
தெப்பமெ னப்பட - வரவுற் றோட்டியே
தெற்றுந திப்புன - லிற்றிரி யத்திகழ்
சிற்பர னெற்றியொண் - விழியிற் பூத்தசேய்
திக்குக ளெட்டினு - நற்றவ னிட்டியு
தித்தத கர்ப்பரி - கடவித் தாழ்ச்சிதீர்
சித்தரு வப்புறு - கைத்திற னுற்றவர்
சித்தசன் வெட்குறு - மழகிற் பூர்த்தியார்
கச்சமு லைக்கரி - மிக்கட வுட்பிடி
கச்சில விக்கிசை - யிகலித் தாக்கவே
கட்டிய ணைத்தித - ழைப்ப ருகிப்பெரு
கக்கல விக்கிசை - நசையுட் டேக்குகோ
கற்றவ ருட்புகழ் - கச்சியி டத்தும
கத்துவ முற்றொளிர் - குமரக் கோட்டம்வாழ்
கத்தனை மெய்ப்பர - முத்திநெ றிப்படு
கைக்கருள் சற்குரு - மணியைக் காக்கவே
11பிரமன் குழிப்பு தத்தத் தனன தாத்த தனதனத் தனந்தனன✓
வித்தைக் கரசி வாக்கின் மிளிர்தரச் சிறந்தறிஞர்
மெச்சிப் புகழு மோத்து முறைகளைப் பகர்ந்தபர
னத்திக் கருளி மீட்ட வமலனிற் பிறந்துலகை
யற்கத் தரும னாற்ற லுறுமயற் பணிந்தெழுது
மத்தக் களிறு தோற்ற மனநினைத் திருந்துமுலை
வட்டக் குறமின் வேட்க வனமதிற் புணர்ந்துமகிழ்
கைத்தற் பணிசெய் சேத்த கரமலர்க் குகன்றனையொர்
கச்சிக் குமர கோட்ட முருகனைப் புரந்திடவே.
12தேவேந்திரன் குழிப்புதனன தாத்தத்த தனதனத் தாத்தனா✓
இலகு கீழ்த்திக் கிலுறைபவர்க் கார்த்தியா
னெழிலி யாற்றுய்க்கு மறலளித் தாக்கமே
விலகு றாக்கற்ப தருநிழற் பூத்தகோன்
விபுதர் வாழ்த்துற்ற குலிசனைப் போற்றுவா
மலகி லாச்சித்தர் முனிவருட் காட்சிதே
ரழகு வாய்த்திட்ட வமலனைத் தேக்குசீர்
குலவு நீர்க்கச்சி நகரினுட் கோக்கள்சூழ்
குமர கோட்டத்து முருகனைக் காக்கவே.
13திருமகள் குழிப்பு தத்தனந் தனதான - தனன தாத்தனா✓
மெச்சுமைந் தருநீழ - லுற்றவிந் திரனாதி
மிக்கவும் பரியாரு - மளவில்பார்க்கணே
வித்தமொன் றுபல்கோடி - மக்களும் பெறுபோக
மித்தெயென் கினுமேத - னருளை நோக்கினோர்
நச்சிடும் பொழுதீய -முற்படுங் கொடைமேவு
நற்குணந் தணவாது - கமல வீட்டில்வாழ்
நட்புறுந் திருமாதை - நித்தலும் பணிவோடு
நட்டுநின் றிருபாத - மலர்களேத்துவா
மச்சமென் பதுதீர - விட்டிருந் தருண்மேவி
யற்பொடுந் துதிபாடி - யிருமைவேட் கைபோ
யற்புதந் தருஞான - சித்தியொன் றுதனாடி
யக்கரந் திகழாறு - நினைகு வார்க்குளே
கச்சலின் றொளிர்தேனை -யொத்தகந் தனைநீடு
கச்சியம் பதிமேவு - குமர கோட்டம்வாழ்
கைத்தலம் புனைவேல - னைக்குகன் றனைவீறு
கட்கடம் பணிவேளை - யினிது காக்கவே.
14கலைமகள் குழிப்பு தத்தத் தனத்தனன தாத்தத் தனத்தனன தந்தனத் தந்தனத் தாந்தா னனத் தாந்தனா✓
பத்தித் துறைக்கணெமை நாட்டித் தனைத்தொழுது
பங்கயச் செங்கழற் பூம்போ தினைச்சார்ந்துவாழ்
பத்தர்க் களிக்குமருள் காட்டித் துதிக்கையுறு
பைந்தமிழ்க் கன்புவைத் தாண்டாண் மறுத்தீர்ந்ததோர்
சுத்தப் பளிக்குவட மேட்டிற் பொறித்தகலை
துன்றுமைக் கொண்டிருத் தான்பா லெனத்தேர்ந்துளே
சுட்டிக் குறிக்கவரு தோற்றக் கலைத்தலைவி
தொண்டினிற் சிந்தையைத் தீண்டா தரித்தோம்புவா
மத்தக் களிற்றுரிவை போர்த்திற் டிருக்குமரன்
மண்டழற் கண்களிற் சேண்பா ருயத்தோன்றியா
வற்றுத் துயர்க்குமுடி வாக்கிக் களத்தசுர
வம்பரைக் கொன்றுகொக் காந்து ரணைக்காய்ந்தசேய்
கத்தப் புடைத்தயனை வாட்டிச் சிறைக்குளிடு
கண்டிதச் சிங்கநற் றேன்பாய் பொழிற்கோங்குசூழ்
கச்சித் திருக்குமர கோட்டத் தருட்குரிசில்
கந்தனைச் சுந்தரக் காங்கே யனைத்தாங்கவே.
15விபூதி ருத்திராக்க பஞ்சாக்கரம்✓
தொழுகோடி யடியவர் தியானிக்க வணிதரச்
சுகநல்கி யிடரைமாற்று
தூய்மையுறு பவரோக மாமருந் தென்னத்
துலங்குதிரு வெண்ணீற்றையு
மெழுகோடி மந்திரங் கட்குநா யகமாகி
யிறைசதா சிவரூபமா
மினியபஞ் சாக்கரந் தன்னொடுகண் மணியினையு
மெண்ணித் துதித்தல்செய்வாம்
உழுகோடி யளிகுலம் பண்பாடி நின்றாடி
யுண்டகடு தேக்கமதுவி
னூற்றுப் பெருக்கெழுக டம்பணி தடம்புயத்
தொன்றுவடி வேலைவிண்ணிற்
கழுகோடி வட்டமிட வொன்னார்கண் மீதேவு
காங்கே யனைச்சிட்டர்சூழ்
கச்சித் திருக்குமர கோட்டத்து ளறுமுகக்
கடவுண்மணி யைக்காக்கவே.
16நவக்கிரகங்கள்✓
சோதித்த கணிதநூ னெறிநின்று கோடாது
தொல்லுலகி லெவ்வுயிர்க்குந்
துன்னுமுரு வினையினள விருபோக முந்தந்து
துருவனி லமைந்துசுழலும்
ஆதித்த னிந்துசேய் பண்டிதன் றேவர்கட்
காரியன் வெள்ளிகாரி
யணிராகு கேதுக்க ளாகுமொன் பதின் மரையு
மடிதொழுது போற்றுகிற்பாம்
பேதித்த சமயங்க டொறும்வேறு வேறான
பெற்றியொடு விளையாடல்கூர்
பெருமானை யொருமா முனிக்குமுத் தமிழினொடு
பிரணவப் பொருளுண்மையும்
போதித்த குருராய னைக்கச்சி நகரினுட்
பொலிகுமர கோட்டமருவும்
புண்ணியவி ளக்கமிக நண்ணிவள ரறுமுகப்
புத்தேளை யினிதருளவே.
17ஒருமை குழிப்பு தனன தனதன தனன தனதன - தனன தனதன தனன தனதன தத்தத் தனந்தனன தத்தத்தனந்தனன - தனனதாத்தனா✓
அருவி லருவென வுருவி லுருவென
வருவு முருவமு மணவி யுயும்வகை
யர்ச்சித் திடும்பெரிய ரிச்சைக் குகந்தபடி
வலவ னெனுமறை யவனு மலைகடன்
மத்தித் தெழுந்தவமு தத்தைப் பணிந்தசுர
ரயில வுதவிய புயலை நிகருரு
வரியு மிறுதிசெ யரனு மயல்புரி
யற்புற் றிருந்தவனு மிக்கத் திருந்தவருள் - பவனுமாட்சிதோய்
அறுகு புனைகண பதியை முதலிய
வளவில் சகளமு நறிய கலவைக
ளப்பித் தசும்பினைநி கர்த்துத் துலங்குமுலை
மலையின் வருமுயர் கவுரி முதலிய
மகளி ரெழுவரு மரிய திரிபுரை
வர்க்கத் தணங்கினரு முக்கட் சிவன்குலவு
மவனி புனலெரி யநிலம் வெளியியி
ரலரி மதியென நிகழெ ணுருவுட
னக்கத் திலங்குமணி யொப்பச் செறிந்த துணை - வியருமேற்றமார்
இருவி ணிலவிய பதவி தொறுமுறை
யிமைய வருமுறை யவர்செய் வழுவறு
மெச்சத் தடைந்தவியுண் முப்பத் திரண்டுடனொர்
கடவு ளருமினு மளவில் சமயிகள்
கருது தலைவரு மவிர்த னதுமது
கைக்குட் பொருந்துவொளிர் கற்பத் தடங்குதலி
லிறைமை யுடையதை யிணையில் பொருளினை
யிறுதி நடுமுத லிலதை யெதிர்பவ
ரெய்ப்பற் றிருந்துசுக முற்றத் தொடர்ந்தருளு - மழுதையாக்கமார்
இருமையினு முறு பெரிய துணையனை
யெவணு நிறைதரு பூரண வடிவினை
யிற்புத் தடங்கடலை யற்பிற் சிறந்துவளர்
கருணை மழைபொழி முகிலை விரிதரு
ககன வெளிதனி னடன மிடுமொரு
கர்த்தத் துவங்கொள்சிவ சித்துப் பரஞ்சுடரை
யிதய மொழியுட லுணர வரிதென
விலகு மருமையை யுரிய வொருமையை
யெத்திக் கினுந்தொழுது தித்தித் திருந்தமிழி- னிசைகொடேத்துவாம்
மருவியமரர்கள் பணியு மிரசித
மலையி லுறைபவ னுதலின் விழிவரு
மத்தக் குழந்தைதனை மைக்கட் பசுந்திருவெ
னுமையுண் மகிழ்வொடு தழுவி முலையமு
துதவ வளர்தரு மிளைய குமரனை
யொப்பற் றுயர்ந்தபல வெற்புற் றிருந்திசைகொண்
மகிப ரடிதொழ வரசு புரிதரு
வலிய முருகனை யளிக ணுகர்தரு
மட்டுக் கடம்புபுனை வெற்றித் தடம்புயனை - யுயர்வினோர்க்கெலா
மறுகு மிடர்புரி யவுணர் குலமுதல்
வளைய வனதுபல் படைக ளொடுகிளை
மட்கப் பெருஞ்சமர்செய் தட்டுத் தழைந்திடுபோ
னுலகு சுரர்குடி புகுத வருள்புரி
யுரிமை மிகுதள பதியை யிருபுடை
யுற்றுத் திகழ்ந்துவளர் கற்பிற் சிறந்தவிரு
மகளிர் கணவனை மறுவி லளவறு
வதன முழுமதி யுடைய புனிதனை
வைப்புத் தனம்பொருவ வெய்ப்பிற் றருங்கொடைகொள்- விபுவையாற்றல்சேர்
கருவி மழைநிகர் களைக ணெனமிளிர்
கமல மலர்புரை படைகள் பலபுனை
கைக்குத் தகுந்தவயில் வைத்திட் டிருந்தவனை
யழலின் மெழுகென வுருகு மனமுடை
யடியர் விழைபல வரமு மருளியு
ளச்சத் தொடுங்கவலை யற்றுப் பிறங்கவரு
கடவுண் மணியினை மணிக ளெறிதிரை
கரைகள் பொருகய மகழி மதிள்புனை
கச்சிப் பெரும்பதியி லெச்சித் தரும்பரவு - குமரகோட்டம்வாழ்
கனக மலையினை யினிய நடமிடு
கலப மயிலுயர் களிறு தகரிவர்
கைக்குப் பரிந்தவனை நற்குக் குடங்கிளரு
மணிசெய் துவசனை யறிஞ ரறிவினு
ளறிய வொளிர்தரு துரிய சொரூபனை
யற்பக் குணங்கடவிர் முத்தர்க் குளன்பிலெழு
கனிவை யெனதக நிலவு மினியதொர்
கதியை மொழிபல துதியை யணியுவ
கைச்சிற் பரம்பொருளை நட்பிற் றொடர்ந்துதின- மினிதுகாக்கவே.