முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
சிறுதேர்ப்பருவம்12 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

சிறுதேர்ப்பருவம்

98✓
காரைக் கறுத்தசெங் கரதலத் தாமரைக்
கட்குலவு மாயிரங்கைக்
கனலிபல ரோருரு வெடுத்தாங் கிமைக்குங்
கதிர்க்கற்றை சுற்றுதெய்வச்
சீரைப் படைத்தவைஞ் ஞாங்கரைத் தாங்கிச்
செழும்படைத் துணைவீரருந்
தேவரு மிலக்கருஞ் சூழ்வரத் தேர்மிசைச்
சென்றசுரர் தானையொடுவெம்
போரைப் புரிந்தாயி ரஞ்சிங்க மாமுகற்
போக்கிக் கொடுஞ்சூரனைப்
பொருதவன் போராற்றன் முற்றுமற மாப்போழ்ந்து
பொருவிலிந் திரஞாலமாத்
தேரைத் தெறுஞ்சன்ன வீரப் புயாசலன்
சிறுதே ருருட்டியருளே
சிவாகாஞ்சி வளர்தேவ சேனாப திக்கடவுள்
சிறுதே ருருட்டியருளே.
99✓
பைம்புய லிடித்தென முழக்கித் தடித்தெனப்
பாய்ந்துநவ வீரரோடு
பாரிடப் படையேவு தெய்வமாப் படைகளெம
படரெனவிடாது பற்றித்
தும்பைபுனை தானவர் கடற்றானை யிகல்வீரர்
தொடுபடை படப்பொடித்துஞ்
சூழனையர் கவசமெய் துளைத்துஞ் சிரங்கரந்
தோளறத் துணித்துமீள
வெம்புலைச் செம்புனற் கடல்பாய் பறந்தலையின்
மிகுபிணக் குன்றுநிமிர
வீய்ந்தவரை விண்ணுய்க்கு மாறுசெல் விமானமென
வீறவுணர் தேர்களுருளச்
சிம்புளென நின்றொரு பெருந்தே ருருட்டிறைவ
சிறுதே ருருட்டியருளே
சிவாகாஞ்சி வளர்தேவ சேனாப திக்கடவுள்
சிறுதே ருருட்டியருளே.
100✓
அஞ்சேன்மி னென்றயர் சயந்தனுக் கிந்திரற்
கமரர்க்கு நேரபயமு
மவுணர்க்கு நேர்பயமு மெற்றைக்கு மற்றாக
வானேறு தாதை மேனான்
மஞ்சேறு பொற்சிலைச் சிலைகொண்டு முப்புரமும்
வாணகைத் தீயின் மாய
வைதிகத் தேரென்றன் மானமுந் நீரிடை
வயங்கியம கேந்த்ரபுரியு
நஞ்சேறு துற்குணத் தாரகன் சிங்கமுக
னமனஞ்சு சூரபன்ம
னாற்றானை யும்பாழ்ப டச்சமர மிருமூன்று
நாளாற்றி வெற்றிகூருஞ்
செஞ்சேவ லங்கொடித் தேரேறு சேவகன்
சிறுதே ருருட்டியருளே
சிவாகாஞ்சி வளர்தேவ சேனாபதிக் கடவுள்
சிறுதே ருருட்டியருளே.
101✓
வில்வப் பசுந்தொடையு மம்பொற் கடுக்கையும்
விராய்நாறு கோடீரமேல்
வெண்பிறைக் கண்ணியுனை யேகம்ப வாணரொடு
மிளிர்காம நோக்கம்மையும்
வல்விக் கினத்தந்தி மாமுகனு மாமகன்
மணாளனும் விண்ணாளு வோரு
மலரகங் கண்குளிர நின்னிரு மருங்கினு
மணித்தே ருருட்டிவரநீ
பல்வக்கி ரப்புவிப் பேய்த்தேரை நிகர்வாழ்வு
பற்றியுட் பித்தேறிடாப்
பக்குவர் வினைக்குன்று பொடிபட வுருட்டியருள்
பரிசினைவி ளக்கலேய்ப்பச்
செல்வக் குமரகுரு பரமுருக நாய்கா
சிறுதே ருருட்டியருளே
சிவாகாஞ்சி வளர்தேவ சேனா பதிக்கடவுள்
சிறுதே ருருட்டியருளே.
102வேறு✓
பிறக்கும் பிறவி போக்கிடனும்
பிறந்தார்க் கிறவி நீக்கிடனும்
பீடார் முத்தி தருமிடனும்
பிறங்கெண் சித்தி வழங்கிடனு
மறக்கு முன்றா தையர்தாயர்
மருவு தமரைக் காட்டிடனு
மணிவே திகைநீள் பணைதவிசு
வயக்குந் தாருத் தடம்பறவை
வெறிக்கும் பொதும்பர் பொய்கைசிலை
வெளிகூ வலினாம் விம்மிதமு
மிகுகாஞ் சியினு ளாச்சிரம
மேன்மை விளங்கச் சைவநெறி
சிறக்குங் குமர கோட்டத்தாய்
சிறுதே ருருட்டி யருள்வாயே
செவ்வேண் முருகப் பெருமாளே
சிறுதே ருருட்டி யருள்வாயே.
103✓
அலுத்த சத்தி யுடைமையினீ
யடியார்க் கருளுந் திறனோக்கி
யடிகேள் வேட்ட தருளுகென
வகத்துட் கவலை மாற்றுகெனக்
கலித்த பிணிநோய் போக்குகெனக்
கடுங்கோண் மயலை விலக்குகெனக்
கனவாழ் வீய்ந்து காக்கவெனக்
கனிவாற் காலை மாலையிலஞ்
சலித்த கரத்தார் வளர்பலர்நின்
றடமா மதிற்பொற் கோயிலெய்தித்
தாட்டா மரைக டொழுதேத்தித்
தாந்தா நேர்ந்த பொருட்பகுதி
செலுத்துங் குமர கோட்டத்தாய்
சிறுதே ருருட்டி யருள்வாயே
செல்வ விசாகப் பெருமாளே
சிறுதே ருருட்டி யருள்வாயே.
104✓
ஊர்க்கு நடுவாழ் கற்பகம்போ
லோங்கி யன்பாற் கழல்பணிவார்க்
குசித விபூதி வழங்குதலா
லும்பர் காம தேனுவென
யார்க்கு மமுத மூட்டுதலா
லிருமா நிதிபோன் றெம்போல்வார்க்
கிம்மை மறுமைச் சுகந்தரலா
லெழின்மும் முரசு முழங்குதலா
லார்க்கு மணியாற் குடமுழவா
லைவாச் சியத்தாற் கரிபரியா
லணியாற் பருவ மகோத்சவத்தா
லாறு கால பூசையினாற்
சீர்க்குங் குமர கோட்டத்தாய்
சிறுதே ருருட்டி யருள்வாயே
திகழா றுமுகப் பெருமாளே
சிறுதே ருருட்டி யருள்வாயே.
105✓
வேண்டா திருக்க வேண்டாதும்
வெறுப்பொன் றாது பொன்றாதும்
வேட்ட விரும்புங் கவர்விரும்பும்
வீறுந் தருவாய்த் தருவாய்நீ
யாண்டா யெம்மை யாள்கின்றா
யாறு குணந்தோய்ந் தொளிர்ஞான
மளிப்பாய் சித்தி யெலாங்கொடுப்பா
யமலா னந்த வீட்டுய்ப்பா
யீண்டா ரெமக்கு நிகரென்று
ளிறுமாந் துனதா ளேத்துகின்றே
மெந்தாய் நின்றன் விளையாட
வெங்கட் கருளு நீரதன்றோ
சேண்டாழ் குமர கோட்டத்தாய்
சிறுதே ருருட்டி யருள்வாயே
திருக்கார்த் திகேயப் பெருமாளே
சிறுதே ருருட்டி யருள்வாயே.
106வேறு தனனத் தாந்தத் தனனத் தாத்த தனத்தன தனதானா✓
தெளிவுற் றோங்கித் தினநிற் போற்று
திறத்தினில் விலகாதார்
திருவிற் சாந்தப் பெரியர்க் கூட்டு
செயற்குள மிளையாதார்
விளிதற் கேங்கித் துயிலற் றார்த்தி
மிகத்தவ முயனீரார்
விவிதத் தீங்குக் கொலையைத் தீர்க்கும்
விருப்புட னருளாள்வார்
களியுற் றீண்டுத் தழைதற் கேற்ற
கருப்பொருள் பெறுமாறே
கருதித் தாம்பற் றறமுற் றாற்று
கடைப்பிடி நழுவாமே
யொளிர்நற் காஞ்சிக் குமரக் கோட்ட
னுருட்டுக சிறுதேரே
யுயர்சித் தாந்தத் துரிமைத் தீர்த்த
னுருட்டுக சிறுதேரே.
107தனதன தனனத் தாத்தன தான தனத்தன தனதானா✓
நிருமலர் விழியிற் புத்தெளிர் ஞான
நிதித்திர ளனையானே
நிபுணர்கள் பரவத் தோற்றரு மோன
நிலத்திடை யுறைவானே
தருமலி கனகப் பார்க்குயர் வாழ்வு
தரற்கென வருதீரா
தமியனுண் மருவிப் போற்றிடு மாறு
தடுத்தடிமை கொள்சேயே
செருமலி யசுரத் தூர்த்தர்கள் வீறு
சிதைத்தொளிர் கதிர்வேலா
திருவரு ணகிரிப் பேர்க்கிளி யோது
திருப்புகழ் நசையானே
யொருமயின் முதுகிற் காட்சிவி நோத
னுருட்டுக சிறுதேரே
யுருவளர் குமரக் கோட்டவி சாக
னுருட்டுக சிறுதேரே.