முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
அவையடக்கம்2 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

அவையடக்கம்

6✓
உயர்சிவன் வலப்பாக முமையவ ளிடப்பாக
மூவர்நடுக் கந்தனெந்தை
யொளிரவரு மினியசோ மாக்கந்த மூர்த்தநிலை
யுலகுணர வொளிர்காஞ்சியின்
மயலறு பரஞ்சோதி லிங்கமுறை வேதமா
மருவுதிரு வேதம்பமு
மாணருட் பிலமேவு தேவிகா மக்கணுமை
மன்னுகா மக்கோட்டமும்
வியன்மிகுந் தனதிரு மருங்குமுற் றோங்கவிடை
மிளிர்குமர கோட்டமுறைசெவ்
வேளெம்மை யாளுடைய முருகப் பிரான்செய்திரு
விளையாட லாகுமிந்நூல்
செயவசைத் தவனருள் விழைந்திடும் பெற்றியாற்
செப்பலுற் றேன்மைந்தர்வாய்த்
தேமழலை மொழியினிற் பிழையெணார் கைக்கொள்ப
செந்தமிழ்ச் செல்வரென்றே.