முருகன் App
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ்
அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை
முத்தப்பருவம்7 / 12
கச்சிக் குமரகோட்டக் கடவுள் பிள்ளைத்தமிழ் · அரன்வாயல் வேங்கடசுப்புப்பிள்ளை

முத்தப்பருவம்

48✓
அருகுவளையா டொருகளிறு
மண்ண லயிராவணத்தேவு
மம்மையுமைமந் தாகினியு
மம்மான்மகளி ரிருவோரு
முருகுவேட்கைப் பெருக்கத்தெம்
முடனாமுருந்தே யிலங்குருந்தே
யுறவே பிராணநாயகவென்
றுரைகளாடி யணைத்தணைத்துப்
பருகுமழலைத் தெள்ளமுதின்
பவளப்பவள வளமிதெனப்
பல்காற்கொஞ்சி முத்தாடப்
பரிந்தன்னவர்க்கு விருந்தளிக்கு
முருகுசுமழ்நின் செங்கனிவாய்
முத்தந்தருக முத்தமே
முதுசீர்க் குமரகோட்டத்து
முருகா முத்தந்தருகவே. 48
49✓
தொல்லைப்பவவெங் கடன்மூழ்கித்
தொலையாத்துயருற் றேங்குமுயிர்த்
தொகுதிக்கருளுங் குரவனெனத்
தோன்று னிரண்டு மருங்கிலுவாழ்
செல்வைப்பொருவு காரளகத்
தேவிமாருட் குறமடந்தை
செல்வாக்கதுகண் டுளத்தாடித்
தெய்வ யானைத்துரைமதடன்
னல்லற்பிழைப்புக் கவதியென்றென்
றசதியாடப் போந்தவளை
யணைக்கவள்ளி மனத்துள்ள
வஞ்சியுட்கோளவட் குணர்த்த
முல்லைமுரன் முறுவலிப்பாய்
முத்தந்தருக முத்தமே
முதுசீர்க் குமரகோட்டத்து
முருகா முத்தந்தருகவே. 49
50✓
அழியும்புவிமே லழியுடறந்
தழியாக்கதியி லெமைச்சேர்ப்பா
னடிமைகொண்டுன் புகழ்பாடு
மருஞ்சொற்பணிசெய் கெனப்பணித்து
விழியுங்குவப்ப காட்சிதரு
மெய்ம்மையருட்கென் கைம்மாறோ
விழைவார்விழையும் பொருண்முழுதும்
விரைந்தீந்தருணின் கொடைமடத்தா
லிழியும் பொருளெம் பாற்பெறலுன்
னிறைமைக் கழகோவிரவலரே
மிதயங்களிப்ப வருளமுத
மெமக்கிங் குதவக் கலைகளெலா
மொழியுநின்செங் கனிவாயான்
முத்தந்தருக முத்தமே
முதுசீர்க் குமரகோட்டத்து
முருகா முத்தந்தருகவே. 50
51✓
நாமான்புலவர் புகழ்ந்தேத்த
நாராயணக் கொண்டலினுந்தி
நளினக்குழந்தை நாணமுழு
நாவலோன்றா னெனவிளங்கிப்
பூமானிதய மகிழ்தூங்கப்
புரைதீர் கல்விமங்கையுடன்
பொலியெண்ணிறந்த பன்மொழியும்
பொன்றாதிலங்கப் பலகலைக
ளாமாறிசைத்துச் சமயங்க
ளகத்தும்புறத்து மிருபுறத்து
மமைத்தந் நெறிசார்மன்பதைகட்
கருள்கூர்ந் திதோபதேசங்கொண்
மூமா மழைபோற் பொழிவாயான்
முத்தந்தருக முத்தமே
முதுசீர்க் குமரகோட்டத்து
முருகா முத்தந்தருகவே. 51
52✓
கோவாமுத்த நகைவிளங்கிக்
கோவைபவளங் கவிர்தவிர்த்துக்
கோபங்கறுப்ப மிகச்சிவந்து
குலவுமறுகாற் பைஞ்சிறைய
மாவானுகரற் கருஞான்
மணத்தேன் பிலிற்றி விதிபடைப்பின்
மருவாதொளிர்செங் குமுதமென
மலர்ந்துமலைமா மடமங்கை
தேவாமுதப் பொற்கலசமுலைத்
தீம்பாலுண்ட மணநாறச்
சிறந்துமுக்கட் டிருத்தாதை
செவிவாய் மடுப்பத்தெவிட்டாத
மூவாமழலை மொழிந்தருள்வாய்
முத்தந்தருக முத்தமே
முதுசீர்க் குமரகோட்டத்து
முருகா முத்தந்தருகவே. 52
53வேறு✓
ஆறுகுண மாறுமத மாறந்த மாறுமதி
யாகவொளி ராறானனத்தும்
ஆறுபடை வீடெனத் தரளநகை நிலவுசெயு
மத்தாணி மண்டபமென
வீறுதலி னடுவணத் தவிசேறி யின்னருள்
விளங்குசெங் கோன்மைபூண்டு
வேதா கமத்துறை வகுத்துமன் பதைமகிழ
மெஞ்ஞான வரசியற்றிக்
கூறுசொற் பொருளுல கியங்கிட வியக்குங்
குருத்துவ சுதந்தரத்திற்
குலவியோ ராறுதிரு நாவரசர் வீற்றிருக்
கும்பெருஞ் சீர்த்தியென்று
மாறுத லிலாதொன்று மிருமூன்று செங்குமுத
மலர்வாயின் முத்தமருளே
மாக்குமர கோட்டமதில் வாழ்க்கைசெய வேட்டகுக
மலர்வாயின் முத்தமருளே. 53
54✓
ஆணவத் தத்துவித மாய்க்கலந் திச்சைசெய
லறிவற் றிருந்தவெம்மை
யவையுறத் தனுகரண புவனபோ கங்கடந்
தைம்பாச பந்தத்தினால்
வீணவத் தைக்குட் பொருந்திவிழை வால்வினைகண்
மிக்கீட்டி விண்மணரகின்
மேவிப் பயன்றுயத் திறந்தும் பிறந்துமிக
விளையாடு சகலராக்கிக்
காணுமிரு வினையொப் பினிற்சத்தி பதியக்
கடைக்கணித் தருண் மூர்த்தியாய்க்
கசடறத் தீக்கைசெய் தீரைந்து காரியங்
காட்டிநற் சுத்தரெனவாழ்
மாண்டிய ரொடுகூட்டி வீடுருளு முருகவேண்
மலர்வாயின் முத்தமருளே
மாக்குமர கோட்டமதில் வாழ்க்கைசெய வேட்டகுக
மலர்வாயின் முத்தமருளே. 54
55வேறு தனன தாத்த தனன தாத்த தனன தனன தத்தன✓
வடிவி லேற்ற மறவர் வீட்டு
வனிதை யிடிய னற்றினை
மதுவை யூட்ட மிசைவை வேட்டு
மதுர மளவு சிற்றுண
வொடிவி லார்த்தி யொடுசெ வாய்க்கு
ளுதவு மவள்க ரத்தினை
யுவமை நீத்த தெனவும் வாழ்த்தி
யுளமு முருகி முத்தமு
மிடுவை நோற்ற பரிசி னேத்து
மெமது துதிக ளைச்செவி
யினிது கேட்கும் விழைவு காட்டி
யிதய மலரி ருத்தலின்
முடிவி லாற்ற லுடைய வேற்கை
முதல்வ தருக முத்தமே
முமல மாற்று குமர கோட்ட
முருக தருக முத்தமே. 55
56தனன தாத்தத் தனன தாத்தத் தனன தத்தந் தனதனா✓
இருளை யோட்டற் கருளை யீட்டற்
கினிது னைச்சிந் தனைநிறீஇ
யிகலு மாற்றற் பொறிசென் மார்க்கத்
தினையொ ழித்துன் கழலுள்வார்
தெருள்செய் கூட்டத் தொருவ னாக்கிச்
சிறிய னுக்குங் கருணைநேர்
செயலி னாற்சொற் பணிக ளாற்றித்
திருமு னிற்குந் தகவுபா
ருருளை போற்சற் றழியு மாக்கத்
துயர்வு நத்தும் பொருளதோ
வுனது மூர்த்திப் பரிச மேற்பட்
டொளிர்வதெற்கின் றமையவே
பொருளி னூற்குப் பொருள்செய் காட்சிப்
புலவ முத்தந் தருகவே
பொருவின் மாட்சிக் குமர கோட்டப்
புனித முத்தந் தருகவே. 56
57தத்தத் தனன தாத்த தாத்த தனன தத்த தனதனா✓
இச்சத் துனது தாட்க ணோற்கு
மெனது சித்த முறைதலா
லெய்ப்பைத் தவிர நோக்கு நோக்கி
லிரவி யொத்து மிளிர்தலான்
மெய்ச்சிப் புகழென் வாய்க்கும் வாய்க்கும்
விமலன் முத்த மிடலெனா
மித்தைப் பொருள வாக்கொ ளேற்கு
மிகுவி சித்ர நடனமார்
பச்சைக் கலபி மேற்கொள் காட்சி
பரிவொ டிற்றை யுதவியே
பற்றுச் சனன நீக்கி யாட்கொள்
பரிசெ னப்பன் முனிவர்சூழ்
கச்சிக் குமர கோட்டம் வேட்ட
கடவுண் முத்த மருள்கவே
கற்பப் பிரம ரேத்த லேற்ற
கவிஞன் முத்த மருள்கவே. 57