உலகுக் கெல்லாம் ஒருமுத லாகி
இலகும் பரம்பொருள் இயற்கையின் வடிவாய்
எங்கும் நிறைந்தே இன்ப மூட்டும்
மலைவனம் வயல்கடல் மன்னும் பகுதி
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
நானில மென்று நவிலப் படுமே
நானிலந் தன்னுள் மேனில மாதல்
குறிஞ்சி நிலமெனக் கூறுவ ரான்றோர்
மன்னிய குறிஞ்சியில் மகிழ்ந்துறை தெய்வம்
முன்னியது முடிக்கும் முருகென மொழிவர்
முருகின் பொருளை மொழியுங் காலை
இளமை அழகு இறைமண மாதிய
வளமுறு பொருள்பல வயங்கித் தோன்றும்
குன்றமர்ந் துறையும் குமரக் கடவுள்
குமர கிரியில் குலவுங் காட்சியை
இமையா தென்றும் காணின்
இமையவர் பதியினும் இனியதிவ் வுலகே.