முருகன் App
குமரகிரி மும்மணிக்கோவை
வித்துவான் கோ. இளையபெருமாள்
வேலை சூழும்4 / 12
குமரகிரி மும்மணிக்கோவை · வித்துவான் கோ. இளையபெருமாள்

வேலை சூழும்

8அகவல்✓
வேலை சூழும் வியனுல கத்தில்
வேலை யிலையென வீணா யலைவோர்
வேலை வணங்கும் வேலை யறிகிலார்
ஞாலம் விளங்க நல்லருள் சுரக்கும்
வானத் துயர்ந்த வள்ளல் கையில்
ஞானத் துருவாய் நண்ணும் வேலை
ஒருமன மாயிருந் துறுதியாய்ப் போற்றின்
முத்தமிழ்ப் புலமை முறையுறத் தோன்றும்
நாற்கவி பாடும் நல்லிசை யுண்டாம்
ஐந்திலக் கணமும் அருளி அறுமுகன்
எழுபிறப் பினிலும் இடரொழித் திடுவன்
எட்டுணை யேனும் ஐய மின்றி
ஒன்பான் வாயில் உடம்பால்
என்றும் எய்துவர் இன்பத் தினையே.
9வெண்பா✓
பத்தியுடன் அம்மையப்பர் பாதம் பணிந்துகனி
அத்திமுகன் பெற்றானே யானாலும்—முத்திக்
கனிநீ முருகா கனிவேண்டி யந்நாள்
முனிவா யெதற்கோ மொழி.
10கட்டளைக் கலித்துறை✓
மொழியும் பிறதெய்வம் உண்டென்று போற்றேன் முருகனையே
ஒழியும் பிறவித் துயரென நாளும் உருகிநின்றே
பழியும் துடைக்கும் குமர கிரியிறை பன்னிரண்டு
விழியும் பொழியும் அருள்வெள்ள மூழ்க விரும்புவனே.