தேவ தேவன் நீயெனத் தெளிந்து
தந்தை பணிந்து தகுமுறை கேட்க
முந்தை மறைப்பொருள் முழுதும் மொழிந்தனை
அகத்திய முனிவர்க் கருந்தமிழ் அருளினை
நக்கீ ரர்க்கு நல்வாழ் வருளி
ஆற்றுப் படைநூல் ஏற்றுக் கொண்டனை
அருண கிரியை ஆட்கொண் டருளித்
திருப்புகழ் கேட்டு விருப்புற் றனையே
குமர குருபரர் குறைதவிர்ந் தருளிக்
கலிவெண் பாமுதல் பலநூல் களித்தனை
ஒளவை மொழியை அமுதென விரும்பினை
பகழிக் கூத்தர் பகர்திருச் செந்தூர்
பிள்ளைத் தமிழ்நூல் பெற்று மகிழ்ந்தனை
பொய்யா மொழியைப் புகழச் செய்தனை
அன்னவர் போல அருந்தமிழ் வேண்டி
நின்னடி யடைந்து நின்றேன்
மும்மல மறுத்து மொழிகமுத் தமிழே.