முருகன் App
குமரகிரி மும்மணிக்கோவை
வித்துவான் கோ. இளையபெருமாள்
விரும்புந் தமிழின்5 / 12
குமரகிரி மும்மணிக்கோவை · வித்துவான் கோ. இளையபெருமாள்

விரும்புந் தமிழின்

11அகவல்✓
விரும்புந் தமிழின் பெரும்பொருள் விளக்கும்
காதலும் வீரமும் கண்ணெனத் தோன்றித்
தமிழர் வாழ்வைத் தகவுறக் காட்டும்
காதல் வாழ்வைக் காணுங் காலை
களவுகற் பெனவிரு கைகோ ளாகும்
உளமகிழ் கூர உயர்தமிழ் வேந்தே
தெள்ளிய சுனையமர் வள்ளி மலையில்
ஏனற் காவல் இனிது வீற்றிருந்த
கானக் குறவர் கன்னியை வேட்டுக்
களவு நெறியைக் கவினுறக் காட்டினை
சூரன் கிளையை வேரறச் சாய்த்து
வாகை சூடி வந்தமை கருதித்
திருப்பரங் குன்றில் விருப்புடன் கூடி
இந்திரன் மகளைத் தந்திட வேற்றுக்
கற்பு நெறியைப் பொற்புறக் காட்டினை
தமிழ்விரித் தருளிய தனிப்பெருந் தலைவ!
குமர கிரியிற் குலவுநின் னருளால்
தமிழைப் போற்றுந் தகவுடைத்
தமிழக வாழ்வு தழைத்தோங் குறுமே.
12வெண்பா✓
குறுமுனிவன் வேண்டக் குலவுமருள் செய்த
அறுமுகவ நாயேனும் அன்பால் — பெறுமுறையில்
நற்றமிழை வேண்டி நயந்துன்பால் வந்தடைந்தேன்
குற்றமெலாம் தீர்த்தெனையாட் கொள்.
13கட்டளைக் கலித்துறை✓
கொள்ளுங் குணஞ்சிறி தில்லாத போதுங் கொடியவெனை
எள்ளும் படிவிடின் நின்பெருந் தன்மைக் கிழுக்குடைத்தே
புள்ளும் விலங்கும் புகலடைந் துய்யப் புரிந்தினிதாட்
கொள்ளுங் குமர கிரியமர் சேவற் கொடியவனே.