முருகன் App
குமரகிரி மும்மணிக்கோவை
வித்துவான் கோ. இளையபெருமாள்
தோயும் புனலிடைச்9 / 12
குமரகிரி மும்மணிக்கோவை · வித்துவான் கோ. இளையபெருமாள்

தோயும் புனலிடைச்

23அகவல்✓
தோயும் புனலிடைச் சுடர்விடத் தோன்றிச்
சரவண பவனெனச் சாற்றும் பெயரோய்
வள்ளிதெய் வானை வடிவேல் உன்பால்
இச்சை கிரியை ஞானம் ஆகிய
மூன்றுமாய் முறையே தோன்று மாயினும்
வானத் துயர்ந்த வள்ளால் நின்கையில்
ஞானத் துருவாய் நண்ணும் வேலைத்
துணையெனக் கொண்டே துயர்துடைத் தருளிக்
குமர கிரியிற் குலவிட நின்றனை
ஆதலின் நின்பால் அடியேன் என்றும்
வீத லின்றி விளங்க
வேண்டுவ துன்றன் விழுத்துணை ஒன்றே.
24வெண்பா✓
ஒன்றே குலமும் ஒருவனே தேவனென
நன்றே உணர்ந்தமையால் நாயினேன் — இன்றே
குமரகிரி சேர்ந்தேன் குலதெய்வம் நீயே
எமபயந்தீர்த் தாள்வாய் இனிது.
25கட்டளைக் கலித்துறை✓
துணையெனக் குன்றன் துணையடி யென்றே தொழுதுதினம்
புணையெனக் கொண்டேன் பிறவிப் பெருங்கடல் போக்குதற்கே
இணையுனக் குண்டோ குமரகிரியுறை எம்மிறைவா
அணையெனத் தேங்கும் அருளா ரமுதம் அளித்தருளே.