முருகன் App
குமரகிரி மும்மணிக்கோவை
வித்துவான் கோ. இளையபெருமாள்
தெய்வ நாயகன்11 / 12
குமரகிரி மும்மணிக்கோவை · வித்துவான் கோ. இளையபெருமாள்

தெய்வ நாயகன்

29அகவல்✓
தெய்வ நாயகன் திருப்புகழ் பாடி
உய்வகை யறியா துறுதுயர்க் கடலுள்
ஐம்புலப் போக்கில் அலைந்து திரியும்
தீவினை யாளரும் நாவினித் திடவே
முருகா வென்றே ஒருகால் மொழிந்து
கரிவளர் குமர கிரிவலம் வந்து
முத்தொளிர் அருவியில் மூழ்கின்
புத்தொளி பெற்றுப் புனிதரா குவரே.
30வெண்பா✓
புனிதமிகு பூமியின்கண் போய்ப்பிறப்போ மென்றே
மனிதப் பிறப்பெடுத்து வானோர் — இனிதுறவே
மண்ணிற் குமரகிரி மால்மருகன் கால்பிடித்தே
விண்ணிற் குடிபுகுந்தார் மீண்டு.
31கட்டளைக் கலித்துறை✓
விண்ணிற் கணிகலம் வேலோன்
விழுத்துணை வேண்டுவதே
கண்ணிற் கணிகலம் கண்ணோட்ட
மென்றுரை காரிகையே
பெண்ணிற் கணிகலம் கொண்டானைப்
போற்றும் பெருங்குணமே
மண்ணிற் கணிகல மாகுங்
குமரன் மலையுலகே.