முருகன் App
குமரகிரி மும்மணிக்கோவை
வித்துவான் கோ. இளையபெருமாள்
சேவடி போற்றிச்8 / 12
குமரகிரி மும்மணிக்கோவை · வித்துவான் கோ. இளையபெருமாள்

சேவடி போற்றிச்

20அகவல்✓
சேவடி போற்றிச் சிந்தையுள் ளுருகிக்
காவடி யேந்திக் களிப்புற வாடி
அணியணி யாய்வரும் அன்பர் கூட்டம்
குமர கிரியிற் கூடுங் காலை
உருகா மனமும் உருகச் செய்யும்
முருகா வென்றே முழங்கும் ஒலியொடு
குழலொலி யாழொலி குறிக்கும் பல்வகை
விழவொலி சென்று விண்ணைப் பிளக்கும்
கண்ணீ ரருவி கடலிற் கலக்கும்
வெண்ணீற் றொளியின் விளக்கம் பெருகி
இருட்பகை இரிய எங்கும் ஒளிசெயும்
பழகு தமிழிசைப் பாடற் கேட்டே
அழகு மயில்மே லாடும் முருக
நின்னை மருகனாய் நேர்ந்தனன்
இன்றமிழ்ப் பின்னே சென்றமா லவனே.
21வெண்பா✓
மாலவற்கு நன்மருகா மன்னுங் குமரகிரி
மேலவனே போற்றுமுயர் மெய்ஞ்ஞான — வேலவனே
வேற்றுப் படையான்முன் வீயாரை வென்றவனே
ஆற்றுப் படையான் அருள்.
22கட்டளைக் கலித்துறை✓
ஆற்றுப் படையின் பொருள்முரு கன்பதி யாறெனவே
சாற்றும் பொருளே பொருளாவ தன்றவன் தந்தவின்பம்
ஏற்று மகிழ்பவர் ஏனோர்க்குங் கூறுதல் என்பதுவே
தோற்றுங் குமரகிரியடைந் தாலின்பம் தோய்குவிரே.