முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
அறனது புரிந்தென்ன9 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

அறனது புரிந்தென்ன

இரட்டையாசிரிய விருத்தம்
8✓
அறனது புரிந்தென்ன மறைமொழி தெரிந்தென்ன
அணிபுகழ் விரிந்தென்னநூ
றாகமம் கற்றென்ன யோகமும் பெற்றென்ன
அரியபிணி யற்றென்ன சீர்
உறுதவ முடித்தென்ன முறைபல படித்தென்ன
உனதருளை யடையாத வர்க்
குறுதியிலை யிம்மையினு மறுமையினு மன்னுபலன்
ஒன்றுமிலை யாதலா லென்
வறுமைகுற்றம் தீர்த்து நிறையருட் கண்பார்த்து
மனசைத் திருத்தி நல்ல
வழிகாட்டி யென்னைநீ யாளுதற் கிதுசமய
மவுன சரவண பவகுகா
திறலவுணர் படையன்று முறியமுனி வொடுசென்று
செருவினில் முடுக்கி வென்று
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.