முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
மாறாத பேராசை8 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

மாறாத பேராசை

இரட்டையாசிரிய விருத்தம்
7✓
மாறாத பேராசை வேரோடி நீள்பாச
வனமதில் முளைத் தெழுந்து
வளர்பெண்டு பிள்ளைகளெ னுங்கவர் விரித்தறிவு
வண்ட ழைகளைச் சொரிந்து
வேறான சுற்றமாம் பறவைக் குழாங்கட்கு
மேவு மிடமாகி நின்று
வெய்ய காமதிமலர் விரவியுறு பாவநறை
வீசிமத மாங்கனி பழுத்து
ஆறாத கவலைப்ர சண்டவெங் காற்றினால்
அலையுமிவ் வாழ்வா மர
மதுகூற் றெனுந்தச்ச னார்கைப் படாமுனுன
தடியிணை கொடுத்தென்னை யாள்
சேறாடு குங்குமக் களபமணி பூண்முலைத்
தெய்வகுஞ்சரி மணாளா
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.