முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
பூங்கதிர் விரிக்குமதி2 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

பூங்கதிர் விரிக்குமதி

இரட்டையாசிரிய விருத்தம்
1✓
பூங்கதிர் விரிக்குமதி தாங்குசிக ரப்பெரிய
பொன்மலையில் இம்மென விழும்
புனல்நதி கறுத்தநிற இனமணி கொழித்தசெயல்
போற்கவுள் மதத் தருவியின்
பாங்கர்வரி வண்டின்கு ழாங்கள் சுதிகொண்டிசை
பகர்ந்து புர ளும்புகர்முகப்
பஞ்சகர குலநளின செஞ்சரண மவுனகண
பதிசகோ தர வேலவா
மாங்குயிலை வென்றமொழி யோங்குகன கும்பமுலை
மாழையொண் கட்பவள வாய்
மஞ்சரி நெடுங்குழற் குஞ்சரி மகிழ்ந்துநித
மருவு மங்கள நாயகா
தேங்கமழ் தருங்கங்கை வேணியற் கினியபொருள்
செப்புமெஞ் ஞான வடிவே
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.