முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
சாதிபல பேதமுறை12 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

சாதிபல பேதமுறை

இரட்டையாசிரிய விருத்தம்
11✓
சாதிபல பேதமுறை யாகிவெகு தூரம் சமீபமாய்
அணுவி லணு வாய்த்
தற்பரமு மாகி வளருற்பனமு மாகியுறு
சமயங் களுக்கு மெட்டா
நாதமயமாகி யழியாத பேரின்ப சுக
ஞான ப்ர காசமாகி
நாலான வேதத்தின் மேலான பொருளாகி
நட்பி னொடு பகையுமாகி
மாதவமு மாகிமனு நீதிபல னாகிமும்
மலபாச விருள கற்ற
வருமணி விளக்காகி விரிகிரண மதியிரவி
வடிவாகி நின்ற முதலே
சீதமல ரனையநின் பாதநித மறவாத
சிறியேனை அடிமை கொள்வாய்
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.