முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
என்னென்ன விதமாக10 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

என்னென்ன விதமாக

இரட்டையாசிரிய விருத்தம்
9✓
என்னென்ன விதமாக முன்னின்று சொல்லிமுறை
யிட்டபோ தினு மேழைமேல்
எள்ளளவு கிருபையு மிலாததே துன்மனம்
இரும்போ திரண்ட கல்லோ
அன்னையே சிறுமதலை தன்முகம் பாராமல்
அகலத் துரத்தி விட்டால்
ஆதரிப்பவர்க ளெவர் பூதலத் தினிலினிய
அமுதகவி மாலை சூட்டி
உன்னையே தொழுமடிமை தன்னை நீ நழுவவிடில்
உன்னை யல்லாமல் வேறோர்
உதவியுண் டோபல உணர்த்தலென் னேயெனை
உவந்தாள்வ துனது கடனால்
தென்னர்கோன் கன்மச்சுரங் கூனிரண்டையும்
தீர்த்தருள்செய் கார்த்தி கேயா
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.