முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
வாசமலர் வகைசூடி4 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

வாசமலர் வகைசூடி

இரட்டையாசிரிய விருத்தம்
3✓
வாசமலர் வகைசூடி நேசமுடன் இசைபாடி
வளர்கொங்கை யதனை மூடி
வஞ்சனை நயம்பேசி விஞ்சுகள பம்பூசி
வளையணி கரங்கள் வீசி
ஆசைமுக மதுகோட்டி மோசவரி விழிகாட்டி
அற்பவின் பத்தை ஊட்டி
அடைவாக சுககந்த பொடிதூவி வெகுசொந்தம்
அப்பொழுது செய்யு மந்த
வேசையர்த மயல்போக்கி மாசுடைய பிணிநீக்கி
மேவுநின் கருணை தேக்கி
மெய்யறிவு தந்தென்னை யாளுதற் கிதுநல்ல
வேளையுனை யே நம்பினேன்
தேசுதிகழ்சரவணத டாகத்து தித்தருள்வி
சித்ரப்ர ணவ சொரூபா
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.