முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
பற்பல கதிர்த்திரள்3 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

பற்பல கதிர்த்திரள்

இரட்டையாசிரிய விருத்தம்
2✓
பற்பல கதிர்த்திரள் எனப்பரு மணிச்சுடர்
பரப்புமகு டத்தி னழகும்
பத்தர்மகி ழக்கருணை வைத்தினிது பார்க்கின்ற
பத்மநய னத்தி னழகும்
உற்பன மறைப்பொருளை நற்றமிழ் முனிக்குமுன்
உணர்த்துசெவ் வாயி னழகும்
ஒழுகமிர்த நயகிரண முழுமதியு மனநாணும்
ஓராறு வதன வழகும்
பொற்பருவ தத்தினை நிகர்த்துவளர் பன்னிரு
புயத்தி னழகும் துலங்கிப்
பொங்குவெண் ணீற்றினழ குங்கண் தமியேன்
புகழ்ந்து தொழ வரமுதவுவாய்
சிற்பர சதானந்த நிட்கள நிராலம்ப
திவ்ய சுக பரிபூரணா
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.