முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
படிபொறுத் திடுமரவு5 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

படிபொறுத் திடுமரவு

இரட்டையாசிரிய விருத்தம்
4✓
@todo add missing 4 lines
படிபொறுத் திடுமரவு விடமுயிர்த் துளறியுடல்
பதைபதைத் துழல மரநீள்
பறவையொத் திடவலய முறுதிசைக் கடகரிகள்
பரதவித் தலறி விழமேல்
உடுவுமிழ் றுதிரமகிழ் அடியர் விக்கினமொழிய
உயர்முகிற் படலம தெலாம்
உடைபடக் கனபரத நடனமிட் டிகலிவிரை
வொடுசமர்க் களம தனிலே
சிடுசிடுத் திடுமவுணர் படைதிடுக்கிட வுபய
சிறையடித் தினிய புகழ்சேர்
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.