முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
ஆரணனு மாகி11 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

ஆரணனு மாகி

இரட்டையாசிரிய விருத்தம்
10✓
ஆரணனு மாகி நெடுநாரணனு மாகியுயர்
அமரர் புகழ் அரனுமாகி
ஆதியாய் நீதியாய்ப் பாதியாய் ஒன்றாய்
அனாதிப் பரஞ் சோதியாய்த்
தாரணி சலங்கனல கோரவளி விண்ணெனச்
சாற்றுமைம் பூதங் களாய்ச்
சத்தியாய்ச் சித்தியாய் நித்தியானந்த வெளி
தானாகி மோன மாகிக்
காரணக் கருவாகி யருவாகி யுருவாய்க்
கனிந்தபே ரருளு மாகிக்
கதியாகி விதியாகி மதியாகி யெங்குங்
கலந்த வேதாந்த வாழ்வே
சீரணி யுலாசபரி பூரண மனோகரா
சிறியேனை அடிமை கொள்வாய்
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.