கறுத்திடு விடத்தொடும் அழற்சிகை பரப்பிய
கடைக்கனல் உதித்த தெனவே
கனப்பொரு களத்திடை யுழக்கிமுடு கிப்பரர்
களைச் சதுர் மருப்புகளினால்
வெறுத்தவர் திடுக்கிட உரத்திடு பதத்தினில்
மிதித்துடல் குழைத்து நனிபோர்
விளைத்தடரும் உக்ரதவ ளக்கட களிற்றிறை
விடுத்திடு யுகப்புய லெலாம்
இறுத்த தொறுவக்குல நிரைத்திரள் பயப்பட
இடித்து வருடித்திடு மநாள்
இடக்கொடு முடிப்பரு வதத்தினை மலர்க்கையில்
எடுத்த வலவற்கு மருகா
சிறுத்திடு மனத்துயர் அகற்றிநய சற்குண
திடத்தினை எனக்குதவு வாய்
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.