முருகன் App
குமரகுரு பதிகம்
மாம்பழக்கவிச்சிங்க நாவலர்
பரவுமிசை வரிவண்டு7 / 12
குமரகுரு பதிகம் · மாம்பழக்கவிச்சிங்க நாவலர்

பரவுமிசை வரிவண்டு

இரட்டையாசிரிய விருத்தம்
6✓
பரவுமிசை வரிவண்டு விரைகமழு மதுவுண்டு
பயிலுமென் மலர்கொண்டு நின்
பங்கய பதங்களில் அணிந்தினிய செந்தமிழ்
பகர்ந்துனை வலம் புரிந்து
சரவணப வாபரா பரவடிவ மேசரா
சரமான கரு ணாகரா
சதுர்வேத பூரணா முதுஞான காரணா
சமரகே தன வாரணா
அரகர குகாநீதி வரதன்மருகா சோதி
ஆதியே என வோதியே
அனுதினமு மெனதுதுரு மனசையொரு வழிநிறுவி
அடியேன் துதிப் பதற்குத்
தெருளது கொடுத்துவெம் பருவரல் கெடுத்துளம்
தேற்றிவினை மாற்றி யாள்வாய்
செயமிகுத் துலவுதிரு மயில்வயப் பரியில்வரு
சிவகிரிக் குமர குருவே.