முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
அத்தனே முப்பத்து6 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

அத்தனே முப்பத்து

5✓
அத்தனே முப்பத்து முக்கோடி தேவர்க்கு
மாதியே வேதமுதலே
அறியாத மலரவன் சிரநடுங் கக்குட்டி
ஆரருள் சுரந்தகுமரா
பத்திசெயு மடியருக் கெத்துயரு நீக்கிடும்
பரமகா ருண்யமுருகா
பகருநால் வகையேழு பிறவிமிகு யோனியெண்
பத்துநூ றாயிரமதில்
எத்தனை தரம்பிறந் தேனிறந் தேனோத
எண்ணுக் கணக்குமுண்டோ
இன்னுமுன் திருவருட் பேறுபெற வெண்ணாத
ஏழைதனை யாள்வதெந்நாள்
வைத்தவா ரணமேவு கொடியனே யடியர்புகழ்
மாவைநக ரதனில்வாழும்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.