முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
கந்தநம வைந்துமுகர்12 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

கந்தநம வைந்துமுகர்

11✓
கந்தநம வைந்துமுகர் தந்தமுரு கேசநம
கங்கைதரு மைந்தநம
கார்த்திகே யாயநம பூத்திடுக டம்புபுனை
கனகமணி மார்பநம
எந்தைநம ஈராறு புயத்தநம மன்னுயிர்க்
கீசநம நேசாநம
இமையவர்கள் தலைவநம கன்னிமா ரிருவருக்
கினியமண வாளாநம
தந்தைநம சங்கரன் குரவநம வைங்கரன்
தம்பிநம நம்பிநமவோம்
சரவண பவாயநம சரவண பவாயநம
சாமியுன் னபயமபயம்
வந்தனைசெய் மாதவன் பூசித்த நகுலமலை
மருவுமுயர் மாவைநகர்வாழ்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.