முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
கங்கைதரு மைந்தனே8 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

கங்கைதரு மைந்தனே

7✓
கங்கைதரு மைந்தனே கார்த்திகைச் சிறுவனே
கானக் குறத்திகணவா
கற்புமலி தெய்வகுஞ் சரிகேள்வ னேயமரர்
கழலடி வணங்குமிறைவா
எங்குமுறை ஆதியே யாவுமறி சோதியே
யாவர்க்கு மொருநீதியே
ஈராறு கையனே காரேறு மெய்யனே
என்னுயிர்க் கினியவுயிரே
சங்கமலி புலவனே சங்கரன் குரவனே
தமிழ்முனிக் கருள்தேசிகா
சரவண பவாயநம சரவண பவாயநம
சாமிநா னுனைநம்பினேன்
மங்கல நிறைந்தமறை யந்தணர் தினந்துதிசெய்
மாவைநக ரதனில்வாழும்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.