முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
திங்களணி செஞ்சடைச்3 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

திங்களணி செஞ்சடைச்

2✓
திங்களணி செஞ்சடைச் சங்கரன் நுதல்விழிச்
செங்கனலி லேபிறந்து
தெய்வசர வணமணிப் பொய்கைதனி லோராறு
சிறுவர்வடி வாய்வளர்ந்தே
அங்கணுறை யோராறு மங்கைமார் கொங்கைதரும்
அமுதுண்டு விளையாடியே
ஆறுதிரு முகமுமீ ராறுசெங் கரமுமாய்
அருளுருக் கொண்டமுருகா
செங்கணரி யும்மலர்ப் புங்கவனு மிந்திரனுந்
தேவர்குழு வும்வேண்டிடத்
திண்டிறல் மிகுஞ்சூர பன்மனைக் கொன்றமரர்
சிறைவிடுத் திடுகுமரனே
மங்கல வளம்பெருகி யெங்குமிசை பொங்கிமிகு
மாவைநக ரதனில்வாழும்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.