முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
தேமேவு நவரத்ன9 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

தேமேவு நவரத்ன

8✓
தேமேவு நவரத்ன முடியழகு மோராறு
திருமுகக் கருணையழகுந்
தேனொழுகு தாமரைப் பூவென்ன வருளொழுகு
திருவிழியீ ராறினழகும்
பூமேவு செம்பவள விதழழகு முத்துமணி
பூத்தபுன் னகையினழகும்
பொன்னகல மார்பழகு மின்னுகுண் டலநிலைப்
பொலிவழகும் மாலையழகும்
காமேவு பூங்குழற் கன்னிமா ரோரிருவர்
கட்டழகு மிட்டதண்டைக்
காலழகு மேழைநான் கண்குளிர வேகண்டு
களிகொள்வ தெக்காலமோ
மாமேவு வடிவொழிய மாருதப் புரவீக
வல்லிதரு மாவைநகர்வாழ்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.