முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
ஏழைத் தொழும்பருக்5 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

ஏழைத் தொழும்பருக்

4✓
ஏழைத் தொழும்பருக் கிக்கலி யுகத்திலே
இனிமையுட னெதுவுமருளும்
இரக்கமுள கடவுளுனை யன்றிவே றில்லையென்
றேவரும் புகலுகின்றார்
தாளைக் கொடுத்தெனது சஞ்சலம் முழுவதுந்
தவிர்த்தருள வேண்டுமென்றே
சந்ததமு முளமுருக மந்திர நினைந்துவெகு
தாண்மையொடு நின்றிரந்தால்
நாளைக் கடத்திவந் திட்டதல் லாலுனது
நல்லருள் கொடுத்ததிலையே
நல்லன் பிலானென்று தள்ளிவிட நீதியோ
நாதனே யபயமபயம்
வாழைக் குலங்கமுகு தேமா வருக்கைமிகு
மாவைநக ரதனில்வாழும்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.