முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
வேறான பாவங்கள்7 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

வேறான பாவங்கள்

6✓
வேறான பாவங்கள் செய்தபே ரென்னினும்
மெய்ஞ்ஞான வள்ளலேயுன்
மேலான சந்நிதி யடைந்தபேர் தூயராய்
மிகுவாழ்வு பெறுவரென்கை
தேறா தெதிர்த்துமுன் மாறான சமர்செய்த
தீரமிகு சூரனுக்குந்
திருவடி பரித்திடும் பேறுதந் திடுமருட்
செய்கையால் இனிதுணர்ந்தேம்
நீறாடி மைந்தனே ஆறான அக்கரம்
நிறைந்தவோங் காரவொளியே
நின்னடித் தொண்டுபுரி யேழையடி யேங்கட்கு
நீயிரங் காததென்னோ
மாறாத பிணிமாற்று நகுலமலை யருவிபுடை
மருவிடும் மாவைநகர்வாழ்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.