முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
காப்பு1 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

காப்பு

✓
மன்னுமருள் கூர்மாவை வைவேற் பெருமான்மேற்
பன்னுந் தமிழ்ப்பதிகம் பாடவே—முன்னருளும்
அஞ்சக் கரத்தனுத வாதிமறை மாமுதல்வன்
பஞ்சக் கரத்தன் பதம்.
✓
வந்திப் பவர்க்கருளும் மாவைவடி வேற்பெருமான்
சந்தத் தமிழ்ப்பதிகஞ் சாற்றவே—புந்திவரும்
முன்னாளிற் பொற்கூடல் முத்தமிழு மாய்ந்தகலைச்
சொன்னா யகிதாட் டுணை.
✓
கண்ணுள் மணியே கருத்துட் கருத்தேயென்
புண்ணியமே ஞானப் பொலஞ்சுடரே—அண்ணலே
மாவைத் திருநகர்வாழ் வைவேற் பெருமான்மேற்
பாவைத் தருவாய் பரிந்து.