முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
பொய்யற்ற கீரனுக்11 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

பொய்யற்ற கீரனுக்

10✓
பொய்யற்ற கீரனுக் கருளவிலை யோதேவர்
புன்மையை அழிக்கவிலையோ
பொன்னகர்க் கிறைவன் மகன்கனவில் வந்தவன்
போற்றவருள் புரியவிலையோ
மையற் பெருங்கிரி துளைக்கவிலை யோவேலை
வற்றவே வேலவிலையோ
வாகுமுத லானவர்க் கருளவிலை யோமுனிவர்
மற்சவுரு மாற்றவிலையோ
தையற்கொர் கரம்வளர வுதவவிலை யோவுமை
தமிழ்ப்பாட வருளவிலையோ
தண்டமிழ்ப் புகழ்கூற வருணகிரி நாதனைச்
சாவது காக்கவிலையோ
வையத் தெமக்கருளு வதுபெரிய வருமையோ
மாவைநக ரதனில்வாழும்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.