முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
தேவாதி தேவனே4 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

தேவாதி தேவனே

3✓
தேவாதி தேவனே யாதிமறை யடிமுடிகள்
தெரியாத குருநாதனே
செங்கடம் புங்குல்லை யுஞ்செச்சை மாலையுஞ்
சேர்ந்தபன் னிருதோளனே
பாவாணர் தருகின்ற செந்தமிழ்த் தொடையமுது
பருகுமா றிருகாதனே
பத்தர்கள் வினைத்தொடர் பறுத்தவர்க் கினியவருள்
பாலிக்கு மிருதாளனே
மூவா முகுந்தற்கு மருகனே யொருகைமா
முகவனுக் கொருதுணைவனே
மொய்ம்புடைய வாகுமுத லொன்பதின்மர் கும்பிடும்
முதல்வனே யபயமபயம்
மாவான வடிவொழிய மாருதப் புரவிசு
வல்லிதரு மாவைநகர்வாழ்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.