முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
ஓரா யிரங்கோடி2 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

ஓரா யிரங்கோடி

1✓
ஓரா யிரங்கோடி கிரணசூ ரியரென்ன
வொளிகாலு மாறுமுகமும்
உயிர்கள்சஞ் சிதவினைக் கட்டறப் பார்க்கின்ற
ஒப்பில்பன் னிருவிழிகளுங்
காரா யிரம்புரையு மீராறு கைகளுங்
கனகதண் டைக்கால்களும்
கன்னிமார் பாகமுங் கொண்டமங் கலஞான
காருண்ய வடிவமுடனே
ஆராத காதலுட னனுதினமு மனமுருகி
ஆறெழுத் தோதிமுன்னின்
றழுதழுது தொழுகின்ற பழவடியர் கண்குளிர
அஞ்சலென வருமுருகனே
வாராத சித்தியருள் பேராயிரங் கொண்ட
வள்ளலே மாவைநகர்வாழ்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.