முருகன் App
மாவைநகர் முருகவேள் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
செம்பிற் களிம்பென்ன10 / 12
மாவைநகர் முருகவேள் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

செம்பிற் களிம்பென்ன

9✓
செம்பிற் களிம்பென்ன மருவுமா ணவமலச்
சேட்டையா லறிவிழந்தே
செய்வதுந் தவிர்வதுந் தெரியாம லலையுநாள்
தீமைபல புரிதலியல்பே
வெம்பும் மலமாயை கன்மத் தொடக்கிலா
விமலநீ கருணையாலே
மிகுபிழை பொறுத்துமே னெறிநாட்டி யாட்கொண்டு
விடுவதுன் கடமையன்றோ
அம்புவி தனிற்கலி யுகத்திலே கண்கண்ட
அற்புதக் கடவுணீயே
ஆற்றமுடி யாததுயர் ஆற்றியுன் பொன்னடி
அடைக்கலங் காத்தருளுவாய்
மன்பதைக் கருள்புரிய வென்றரு ளுருக்கொண்டு
மாவைநக ரதனில்வாழும்
மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக்கடவுளே.