அரிபிரம ரறியாத வானந்த சோதியா
யகிலாண்ட மாகியுற்ற
வாதிசிவ நேத்திரத் தாறுபொறி யாகவந்
தவியாத சோதியாகி
யனலனோ டனிலனும் மாற்றாம லாற்றியே
யணிகங்கை வைப்பவதுதன்
வரிதிரைக் கையினாற் சரவணப் பொய்கையின்
வைக்கவந்தா றுருவமாய்
வாடாத மாதரறு முலையூறு பாலமுத
வாரியுண் டாடிநிற்கும்
வடிவினைக் காணநின் னன்னையும் மத்தனும்
மால்விடையி வர்ந்துவந்து
கருதின ரெடுத்துநன் மணிமார்பு றத்தழீஇக்
காதலாலொன் றுசேர்த்துக்
கந்தனெனு நாமமிட் டவர்நடு விருத்துறக்
காணுசோமா ஸ்கந்தமாய்க்
காரேறு வானநெறி தானேறு கைலையுறு
கந்தகிரி வந்தபரமே
இருவினைக் கீடான வாசையுற் றுழலுவேற்
கெப்போது னருள்கிடைக்கு
மேழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னேபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.