திங்களொடு பானுமுத லானநவ நாயகர்கள்
சேரொளிகொ ணவரத்தினச்
செங்கனக முடியேறு குழையாறி ரண்டுமிளிர்
தேசோம யத்துருவமாந்
தேங்கருள் விழிக்கமல மீராறு கொண்டழகு
செய்யுமுக மாறினொடு
துங்கமுறு முந்நூலொ டாரம்ப தக்கங்க
டொங்குநீ பத்தலங்கல்
தோய்ந்தமணி மார்பகம் வாய்ந்தவே லாயுதந்
தூயகுலி சப்படையொடு
துயல்வரு மலர்க்கர மியல்வர வளர்ந்தோங்கு
தூவிமயி லேறியிருபாற்
புங்கவர்க ளுக்கமுத மிட்டமா லிடம்வந்த
பொற்கொடியர் பற்றிநிற்பப்
புகழுமடி யாருளக் கமலத்தில் வந்திடும்
புண்ணியபு ராணமுதல்வா
பூவடியை நம்பினேன் பூசிக்கு மடியனேன்
புன்மைதீர்த் தருளவேண்டும்
எங்குமுள பொருளாயு மென்னுளக் கவலைதனை
யேனொழிக் காதொளித்தாய்
ஏழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னெபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.