இம்மையார் பூமிநீர் தேயுவளி யாகாச
மானவைம் பூதமுந்நீ
யரிதிங்க ளியமான னானமுன் றோடுசேர்ந்
தட்டமூர்த் தங்களுந்நீ
யாயினும் மடியாரு ளத்தினைச் சோதிக்க
வகலநின் றாய்வதுந்நீ
பொய்ம்மையாந் தாய்தந்தை மனைமக்க ளாதியாம்
பொருகுடலி லிடுவதுந்நீ
பொன்னாசை யலையடிப் பட்டுவரு மின்பமாம்
புளினத்தி லேற்றுவதுந்நீ
போனசென் மத்தினிற் செய்ததவ மாய்ந்துமிகை
போக்கியருள் புரிவதுந்நீ
மெய்ம்மையா யடியவரு ளத்துறைந் தவர்க்கென்று
மிக்கருள் சுரப்பதுந்நீ
மேலான கல்வியும் மழியாத செல்வமும்
மேவுறவ ளிப்பதுந்நீ
வேறொருவர் மனைமேவி யிரவாம லெந்நாளும்
வேண்டுவன தருவதுந்நீ
எம்மையாண் மாலினிரு கண்ணிகரும் வல்லிய
ரிணைந்துபடர் தருவுநீயே
யேழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னேபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.