முருகன் App
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
குமாரசுவாமிக் குருக்கள்
வைகறைப் போதெழுந்6 / 12
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் · குமாரசுவாமிக் குருக்கள்

வைகறைப் போதெழுந்

5✓
வைகறைப் போதெழுந் தாறெழுத் தோதிவட
வாரிதியொ டமருதீர்வை
வார்புனன் மூழ்கிவெண் ணீறப்பி யக்கமணி
மார்புறவ ணிந்திருந்து
மாசந்தி வந்தனை முடித்துமதி தவழ்சோலை
மாவைக ரத்தில்வந்து
பொய்யெனப் புகலுமுடல் பூமியிற் புரளுறப்
புரிவலஞ் செய்தெழுந்து
புண்ணியமெய் யாலயத் துட்புகுந் தன்போடு
போரரானை வதனத்தனைப்
பூசைபுரி வித்தபின் னாசையொடு நின்கோயிற்
பொன்வாசல் முன்புநின்று
கைகளைச் சிரமீது சேர்த்துநாக் குழறிடக்
கண்ணினீ ராறுபெருகக்
களிப்பினுட னாயிரத் தெட்டுநா மமுஞ்சொலிக்
கடம்பலரினர்ச் சனைபுரீஇக்
கற்பூர வாராதரி கங்கண்டு கசியுமிரு
கண்ணுளார் தங்களுக்கிங்
கெவ்வகைப் போகமும் மிசைவுறச் செய்துநின்
னிணையடி யளிக்குநாத
வேழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னேபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.