உன்னையல் லாதுபிற தெய்வத்தை நேசிக்கி
னுன்புகழ்க் கேற்றமாமோ
வொப்பிலாக் கருணைதரு நாளெதுவென் றென்றுன்னி
யுன்னியென் மனமுருகுதே
யுற்றதுணை யானநீ யறியார்கள் போலொன்று
முரையாதி ருக்கலாமோ
மின்னையல் லாதுவமை யில்லாத யாக்கையின்
மேவுபல னென்னைகொல்லோ
மேனாளி னீட்டுதவ மில்லெனினு மக்குறையை
வீட்டியருள் கூட்டலரிதோ
விடையேறி யருண்மைந்த வுமைமாது பெறுகந்த
வெற்றிவே லுற்றகைய
அன்னையர்க ளிருவரையு மிச்சைகிரி யாசத்தி
யாக்கிநடு வாகிஞான
மானவடி வாகிமுது ஞானகுரு வாகிவழி
யடியார்கள் பாவினுக்கே
யாசையுற் றவர்மனப் படியெலா மாக்குவோ
யருடரக் கலியுகத்தில்
என்னையுனை யல்லாது கண்கண்ட தெய்வமில்லை
யென்றந்தை யன்னைகுருவே
யேழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னேபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.