கற்பகத் தருநீழல் பிரியாத ரம்பையர்கள்
காட்டநா லிருமங்கலம்
கைத்தாள மொத்தாடு மாதர்வா யோடுதீங்
கவியமுத முண்டுநீண்டு
காழ்கொண்ட நாலுகோட் டிபமுகைத் தசுரரைக்
காதிக்குறைக் குமொருவன்
பொற்பத மிழந்துபுவி புக்கடவி போயுறப்
புங்கவரை யேவல்கொண்டு
புன்புலால் சுமப்பித் திருஞ்சிறைப் புகத்துளம்
புண்ணுறவ ழுங்கவைத்துப்
புரிசடைப் பண்ணவன் பொன்னடிதனைப் பேணிப்
பொருவில்பல் வரங்கள்கொண்டு
அற்புதத் தாயிரத் தெட்டண்ட மரசுசெய்
தரியமா யங்கள்கற்ற
வவ்வசுர சூரபன் மாவினைச் சங்கரித்
தாடுமயி லொடுசேவலா
வாக்கிமக வானையர சேற்றிமுடி சூட்டியவ
னருமைமக டனைமணந்த
எற்பக வெறிக்குநின் னெழிலோங்கு புகழ்வகுத்
திசைக்கவென் னான்முடியுமோ
வேழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னேபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.