முருகன் App
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
குமாரசுவாமிக் குருக்கள்
தாமோதரக் கடவு8 / 12
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் · குமாரசுவாமிக் குருக்கள்

தாமோதரக் கடவு

7✓
தாமோதரக் கடவு ணாபியங் கமலமலர்
தந்தபர மேட்டிதன்னைத்
தளையிட்டு விரிவுற்ற வுலகத்தை யருள்செய்து
தானேது லங்குபிரம
தற்பரா நந்தகுக வற்புதா நந்தசிவ
சற்குணா தீதநாத
காமாதி யாறுபகை யேறாதி ருக்கவுங்
கருத்திலெப் போதுமுன்னைக்
கருதாத கசடரைக் கூடாதி ருக்கவுங்
கற்றோர வைக்கணின்று
கற்பகம் போலவுரை தப்பாது ரைக்கவுங்
காரேறு கேட்டபணிபோல்
ஏமாறி யெதிர்நிலா தேற்றபகை யோடவு
மெட்டுவகை யைசுவரிய
மெல்லாமி சைந்துலகில் வாழ்ந்திருந் தீற்றினின்
னிணையடி நிழற்கெய்தவு
மீராறு கருணைவிழி நேராக வேணுமென்
றென்றுமுனை யேத்தல்புரிவேன்
ஏமார்ந்து மாநிலத் தவர்வாழ வந்தபர
வேகாந்த நாதவொளியே
யேழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னேபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.