முருகன் App
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
குமாரசுவாமிக் குருக்கள்
மாருதப் பிரவல்லி10 / 12
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் · குமாரசுவாமிக் குருக்கள்

மாருதப் பிரவல்லி

9✓
மாருதப் பிரவல்லி தன்குதிரை முகமாற
மாற்றிநன் முகமாக்கினை
மன்னன்முசு குந்தனுக் குன்றம்பி மார்களை
மன்பொருந ராக்கிவைத்தாய்
மறைமுனி மகத்தில்வரு செச்சையை யிவர்ந்துதிரு
வாகனம தாக்கிவைத்தாய்
பாரினின் மலைக்குறவர் பால்வந்த வள்ளியைப்
பற்றிமனை யாக்கிவைத்தாய்
பாரிடமு ணாதபடி பாடுநற் கீரனைப்
படிமீது மீட்டுவைத்தாய்
பண்டிதர்க ளீண்டியுறை சங்கத்தி ருந்துபொருள்
பகரவும் பண்ணிவைத்தாய்
சூருடல்பி ளந்துபின் கோழிமயி லாய்வரச்
சொல்லடிமை யாக்கிவைத்தாய்
தொல்பரங் குன்றினிற் றெய்வானை யம்மையைத்
துணைமனைவி யாக்கிவைத்தாய்
துய்யதோள் வீரனுக் குருவெலாங் காட்டியே
தூயனாச் செய்துவைத்தாய்
ஈருமிரு தலைக்கொள்ளி யெறும்புபோ லலைந்திடும்
மிழிகுனுக் கருளரிதோ
வேழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னேபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.