பங்கயன் மாயவன் னிந்திரன் வானவர்கள்
பாலாழி கடையுநாளிற்
பாலாகி வந்தவிட முண்ணுமென் றஞ்சியே
பார்த்தோடி வந்தடுக்கப்
பக்கத்த மைத்துவரு நஞ்சினை மிசைந்தபசு
பதிதந்த பாலநின்னை
அங்கயற் கண்ணியுமை மங்கைகண் குளிரவந்
தாடுங்கு ழந்தையென்ப
ரசைவற்ற மேருகிரி யிசைவுற்று வானவர்க்
கானபே ருருவுகாட்ட
வையநின் னுருவினைக் கண்டஞ்சி யவரழித
லறிகிலாப் பரமவாதர்
புங்கவர் பெரும்பகை துரத்துமொரு வேல்கொண்டு
புரியவிழ்க டப்பமாலை
புரளுகடி மார்பின்வட மேருநிக ரிணைமுலைகள்
புக்குநன் கழுத்தத்தழூஉம்
புயலளக வள்ளியொடு தெய்வானை பாங்குறப்
புள்ளிமயி லேறிவருவாய்
எங்கிருந் தாலுமுன் னடிமையைக் கைவிடே
லிகபரசு கப்ரசாத
வேழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னேபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.