முருகன் App
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
குமாரசுவாமிக் குருக்கள்
கங்கையைத் தலைமீது4 / 12
மாவைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம் · குமாரசுவாமிக் குருக்கள்

கங்கையைத் தலைமீது

3✓
கங்கையைத் தலைமீது மங்கையை மடிமீது
கண்டழகு கொண்டசுடரைக்
கருத்தினி லிருத்தியனு பூதியின னாகியவ
கத்தியனி ரந்துநிற்பக்
கனைஞான வுபதேச குருவாகி யினியதமிழ்
காட்டுகுரு வாக்கிவைத்த
மங்கையுமை செப்போது கொங்கைபா லமுதூறி
வழியும்வாய் முருகவுன்றன்
மாறிலா வாறெழுத் தோதுவார் தீவினை
மாய்வதற் கையமுண்டோ
வரிசைபெற் றுயர்தேவ ரெல்லோரு முன்னாமம்
வாயாலி சைத்தவரலோ
அங்கியொரு கையில்வைத் தடியின்மற் றொருகைவைத்
தபயமொடு தமருகம்மு
மமரவைத் தமராத திமிரபத கன்முதுகி
னடிவைத்து நடனமாடி
யானந்த மொடுநோக்க வானந்த னைத்தாவு
மரியவரை தோறுமாடி
இங்கெனைக் கருணையா னோக்காது கைவிடின்
யாவரெனை யஞ்சலென்பா
ரேழையேன் செய்தபிழை யாதேனு முண்டாயி
னின்னேபொ றுத்தருளுவா
யெழில்வள்ளி கணவனே பொழின்மாவை நேயனே
யீசகுரு நாதகுகனே.